ஜோசப் ஸ்டாலின்

 உலக வரலாற்றில் முக்கிய தலைவரும், ரஷ்யாவை வல்லரசாக உருவாக்கியவருமான ஜோசப் ஸ்டாலின் 1878 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 18)தான் பிறந்தார்











💐.
லெனின் மறைவுக்குப் பின், 1922 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக செயல்பட்டார். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை தோற்றுவித்து, உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக ரஷ்யாவை மாற்றினார்.
போரின் காரணமாக உலகம் முழுவதும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவியத் யூனியனில் மட்டும் ஸ்டாலின் கொண்டுவந்த ஐந்தாண்டு திட்டங்களால் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்றது.
இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வீரம் அசாதாரணமானது. உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் ஏராளமான உயிர் இழப்புகளையும், பொருள் இழப்புகளையும் சந்தித்து இருந்தன.
போரின் முடிவில் ஸ்டாலின் தலைமையில் சோவியத் வீறு கொண்டு எழுந்து நின்றது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,