பூவுலகம்/அனுபரமி
மனமுவந்து எடுக்காத முடிவுகள்...
பெரு மாற்றத்தையே, உண்டாக்கி விடுகின்றன...
ஆற, அமர சிந்தித்து எடுத்தவைகளோ...சிதைந்து, செல்லரித்து போகின்றன....
நிகழும் என உறுதியாக்கப்பட்டவைகள்,
நிமிடத்தில் உருமாறியும்,
சாத்தியமேயில்லை என்பவைகள் எல்லாம்.... சங்கடமாகவே அனுபவிக்கும்படியும் தொடர்கின்றன.....
பத்து பொருத்தங்களின் validity பத்து மாதங்கள் கூட பொறுப்பதில்லை...
ஜென்மங்கள் கூட சேர வாய்பில்லாதவைகள்.... எதோ ஒன்றில் கட்டுண்டு காலம் கடக்கின்றன....
பொருத்தமற்றவைகள் எல்லாம்....பொருந்தியும்,
பொருந்த வேண்டியவைகள் எல்லாம்.....தனித்தும்...
அல்லலுறுகின்றன...
தேவையானவைகள்,
தேவைகளைத்தேடாத இடத்தில்.. மிகுதியாகி மீந்தும், தேவைகள், அவசியம் தேவையெனும் இடத்தில் இல்(ய)லாமைகளாகவும், மாறி போகின்றன......
அவசியங்கள் கூட பேராசை என்று அடக்கிவைக்க படுகின்றன....
ஆடம்பரங்கள் அனைத்திலுமே
நல்லவை என்ற பெயர் நகைப்புக்கும், சந்தேகத்திற்க்கும், பரிசீலிக்க படுகின்றன .... தீயவைகள், எல்லா விதத்திலும் நியாயமாக்கபடுகின்றன
எளியவர்கள்...... ஏந்திகொண்டே இருக்கவும், ஏய்ப்பவர்கள் ஏற்றம் பெறவுமே, எவரோ விரித்த வலையில் மீளாமல் இருக்கிறது..... இச்சமூகம்.
நான்கே விதிகள்தான் ...
ஆண், பெண்,
ஏழை, பணக்காரர்,
சாதி, ஆளுமை
நீதி, அநீதி.....
அவ்வளவுதான்..... இப்பூ..பூ..பூ..வுலகத்தின் அடிநாதம்.
இனி மறையட்டும் ஏற்றத்தாழ்வு....
சந்தோஷத்தை மட்டும் எல்லோருக்கும் சமமாக்கட்டும்.
தாழ்வு மனப்பான்மையும், தாராள மனப்பான்மையும்.... தேவையற்றதாகட்டும்...
அவரவர் உழைப்பை அவரவர் மதிப்பாக்கிக்கொள்வோம்...
பணம் தாழ்ந்தும், மனித மனம் உயர்ந்தும்.....உலகம் செய்வோம்..
புன்னகையில் புது விதை நடுவோம்....
கை கழுவியது போதும், கழுவி துடைப்போம் பூ மனிதர்களின் மணங்களையும்..இப்பேரண்டத்தையும்.
Comments