சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனரின் சோக முடிவு
விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோ அருகே அனாதையாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விஜயகாந்த் நடித்த சூப்பர்ஹிட் படமான ’மாநகர காவல்’ என்ற படத்தை இயக்கியவர் எம்.தியாகராஜன். அருப்புக்கோட்டையை சேர்ந்த இவர் சினிமா டிப்ளமா படிப்பு படித்தவர் என்பதும் பிரபு நடித்த ’வெற்றி மேல் வெற்றி’ மற்றும் ’பொண்ணு பார்க்க போறேன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பதும் அதன் பின்னர் விஜயகாந்த் நடிப்பில் ஏவிஎம் தயாரிப்பில் உருவான ’மாநகர காவல்’ என்ற படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
’மாநகர காவல்’ படம் சூப்பர் ஹிட் ஆன போதிலும் அவருக்கு மேலும் சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் வறுமையில் வாடியதாகவும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு, தெருவோரம் படுத்து தூங்கியதாகவும் தெரிகிறது
இந்த நிலையில் இன்று காலை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ அருகே அனாதையாக தியாகராஜன் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த மாநகர காவல்துறையினர் அவரது உடலை மீட்டு இறுதி சடங்கு செய்ய உதவி செய்ததாக கூறப்படுகிறது
இது குறித்து இணை இயக்குனர் நீலன் கனிஷ்கா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: சினிமாவில் வெற்றி மேல் வெற்றி அடையாமல் ஏவிஎம் முன்பாகவே உயிரிழந்து மாநகர காவல் துணையோடு அன்னாரின் இறுதி நாள் இப்படியாக முடிந்தது காலத்தின் கோலம் இன்றி வேறென்ன?
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
என்று பதிவு செய்துள்ளார்
நன்றி: india glitz
Comments