பகவான் ரமணரின் வாழ்க்கையில்
21-12-21 பகவான் ரமணரின் 142 ஆவது ஜயந்தியை நினைவு கூறும் வகையில் ரமணாஸ்ரமத்தில் நடந்த ஒரு சம்பவம்:
தேவராஜ முதலியார் புத்தகத்திலிருந்து :
தேதி 15-4-1946. பகவானின் பக்தை
சூரி நாகம்மா தரிசன ஹாலிற்கு வந்து பகவானை நமஸ்கரித்து வலம் வர ஆரம்பித்தாள்.
பகவான் ரமணர் சிரித்துக் கொண்டே "ஓஹோ, நீயும் ராவனம்மா ,மாதிரி
ஆரம்பித்து விட்டாயா? இதனால் என்ன
நடக்கிறது தெரியுமா? புதிதாக
தரிசனத்திற்கு வருகிறவர்கள் "ஓஹோ, இங்கே வந்து பகவானை
தரிசிப்பவர்கள் முடிந்த அளவு அவரை வலம் வர வேண்டும் போலிருக்கிறது என்று
நினைப்பார்கள். உண்மை ` நான் தான் அந்த அழியாத ஆன்மா. என்னைச் சுற்றித்தான் மற்ற
அனைத்தும் சுற்றுகின்றன என்று நினைப்பது தான். இதைத் தான் ரிபு கீதை சொல்கிறது.
"அந்த ஜானகியை
எடுத்துக்கொள். நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டாள். மண்டியிடுதல், நமஸ்காரம்
என்று செய்து கொண்டே இருப்பாள்.' என்று பகவான்
சொன்னதும் ஒருவர் `ஆமாம். பகவானை அவள்
சிறு வயதிலிருந்தே ஆராதித்து வருகிறாள்' ' என்றார். பகவான் "ஆமாம். சில பேர்
நான் நடக்கும்போது குறுக்கே விழுந்து நமஸ்கரிக்கிறார்கள். என்னால் ரொம்ப நேரம்
நிற்கவும் முடியவில்லை. என்ன செய்ய? உண்மையான நமஸ்காரம் நான் என்கிற அகந்தையை
விடுவது தான். "
`ஆனால் பகவான், நீங்களே அருணை மலையை ப்ரதக்ஷிணம் செய்யச் செல்கிறீர்களே,
கோவிலுக்கும்
சென்றிருக்கிறீர்கள். இது எப்படி ....'
“`அது தான் சொல்ல வருகிறேன். வலம் வருவது தவறு அல்ல. ஆனால் `நான் ' என்கிற பாவம்
இல்லாமல், அகந்தை இல்லாமல் உன்னை நீயே நமஸ்கரிப்பது நல்லது. யந்திர கதியில் வெறுமனே வலம்
வருவது சரியல்ல. அதனால் எந்தப் பலனும் இல்லை."
தொகுப்பு ஸ்ரீதர் சாமா
Comments