"சோ'' ராமசாமி

 பிரபல நகைச்சுவை நடிகரும் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரும் , அரசியல் விமர்சகருமான "சோ'' ராமசாமி அவர்களின் நினைவு தினம் இன்று






😢
பத்திரிக்கை உலகில் பலருக்கு ஆசானாக விளங்கிய சோ ராமசாமி , அரசியல் விமர்சகர் என்பதில் பெயர் பெற்றவர். துக்ளக் பத்திரிக்கையின் சிறப்பான அரசியல் விமர்சனம் அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதற்கு காரணம் இவரது வலிமையான எழுத்துக்களே.

இவரது இறுதி காலம்

சிறிது காலமாகவே நோய் வாய்ப்பட்டிருந்த சோ ராமசாமி பலமுறை மரணத்தின் விளிம்பை தொட்டு வந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சென்று பார்த்தார், அதன் பின்னர் உடல் நலம் தேறி வந்த அவர் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அதே அப்போலோவில் மீண்டும் உடல் நலக்குறைவால் டிசம்பர் முதல் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜெயலலிதா டிசம்பர் 4 ஆம் தேதி உயிருக்கு போராடும் செய்தி கேட்டு இவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. உடனடியாக ஐசியூவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்










காலமானார். சோவுக்கு மனைவியும் ஒரு மகளும் , மகனும் உள்ளனர்.
பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர் சோ.துக்ளக் பத்திரிக்கையின் ஸ்தபகரான இவர் அதில் எழுதிய அரசியல் கட்டூரைகள் பிரபலமானவை. நையாண்டி கட்டூரைகளை எழுதுவதில் வல்லவர். சாதாரண்மாகபேசும்போதே நகைச்சுவையும் நையாண்டியும் இவரது வார்த்தைகளில் வந்து விழும் . அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்து தந்தது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,