இசையமைப்பாளர் டி.இமான் விவாகரத்து; மனைவியை பிரிந்ததாக அறிவிப்பு

 இசையமைப்பாளர் டி.இமான் விவாகரத்து; மனைவியை பிரிந்ததாக அறிவிப்பு

இசையமைப்பாளர் டி.இமான் தானும் தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

சென்னை,


தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், தனது மனைவியும் தானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்றுவிட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை. 


எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என்று அவர் பதிவிட்டுள்ளார். 


டி.இமான்-மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி