சிவாஜிக்கு நடிப்பு உயிர்.
எம்ஜிஆருக்கு எப்படி சண்டை உயிரோ அதேபோல சிவாஜிக்கு நடிப்பு உயிர். ஆனால் சண்டை காட்சிகளில் எம்ஜிஆர் அளவுக்கு ரிஸ்க் எடுக்கமாட்டார். சிவாஜியும் தங்கமான மனிதர்தான். அவருக்கு 40 படங்களுக்கு மேல் டூப் போட்டுள்ளேன். எம்ஜிஆர் வீட்டில் எப்படியோ அதேபோலத்தான் சிவாஜி வீட்டிலும் நல்ல கவனிப்பார்கள். அப்போது நான் மாஸ்டராகி விட்டேன். என்னுடைய மகளின் திருமணத்தின் போது பத்திரிக்கை கொடுக்க அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவருக்கு ”சவாலியே” விருது வழங்குவது குறித்து சில ஆங்கிலேயேர்கள் அவர் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் ’ஒன்ஸ் அப்பான் ஏ டைம் மை டூப்’ என ஆங்கிலத்தில் என்னை பற்றி புகழ்ந்து பேசினார். அதேபோல என்னுடைய இரண்டாவது மகளின் திருமணத்திலும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
- ஸ்டண்ட் மாஸ்டர் சாகுல்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்
Comments