வால்ட் டிஸ்னி

 வால்ட் டிஸ்னி காலமான தினமின்று!


😢
நடப்பதே நடந்ததையே நினைத்து வருத்தப்படுபவர்கள் அதிகம் அவர்கள் வாழ்கையில் முன்னேற வாய்ப்பில்லாமல் போகிறது . அடுத்து நடப்பதை யோசிப்பவர்கள் வாழ்கையில் முன்னேறுகிறார்கள் அதற்கு சிறந்த உதாரணம் பல பேர் அவர்களில் வால்ட் டிஸ்னியும் ஒருத்தர்.
வால்ட் டிஸ்னி ஓர் ஓவியர்."ஆஸ்வால்ட் "என்ற பெயரில் முயல் கதாபத்திரம் ஒன்றை உருவாக்கி அனிமேஷன் படங்களை தயாரித்து புகழ் பெற்றார் நல்ல சம்பாதித்தார்.ஆனால் மற்றவர்கள் தந்திரமாக சூழ்ச்சி செய்து அவருடைய ஆஸ்வால்ட் கதாபத்திரத்தை அவரிடம் இருந்து பறித்து விட்டனர்.அதுமட்டும் இல்லாமல் அவரிடம் பணிபுரிந்த ஓவியர்கள் அனிமேஷன் நிபுணர்கள் இப்போது அவர்கள் பக்கம்.
இதனால் மனம் நொந்து வெகுநேரம் புலம்பிய வால்ட் டிஸ்னி கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார் "நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை.அடுத்து நடப்பதை யோசிப்பதே புத்திசாலித்தனம் ... அவர்கள் என் படைப்பை பறித்து விடலாம் ஆனால் என் கற்பனைகளை எதுவும் செய்ய முடியாது ஆஸ்வால்ட்-க்கு பதிலாக அதை போலவே வேறொரு இன்னொரு வெற்றிகரமான கதாபத்திரத்தை உருவாக்குவேன்"என்று உறுதியாக நினைத்தார்.
அதை ஒட்டி புதிய அனிமேஷன் கதாபாத்திரங்களை நினைத்து கடைசியாக அவரின் செல்ல பிராணி ஒரு எலி "மார்டிமெர் " அதை மனதில் நினைத்து அதை வரைந்து அதற்கு மனிதரை போல் பான்ட்,சட்டை எல்லாம் போட்டு அசத்தலாக வரைந்தார்.
அதை தன் மனைவியிடம்(லில்லியன்) காண்பித்ததும் அவர் வாவ் என்று துள்ளி குதித்தார். கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்று கேட்டார் லில்லியன் "மார்டிமெர்" என்று சொன்னார் வால்ட் டிஸ்னி.
அதற்கு லில்லியன் "பெயர் நீளமா உள்ளது வேற பேர் வைப்போம்"னு சொன்னார்."சரி ஒரு நல்ல பேர நீயே சொல்லு"னு சொன்னார் டிஸ்னி அதற்கு அவர் மக்கள் மனசுல எப்பொதும் நிக்கணும் அதனால் "மிக்கி " னு ஒரு பேர சொன்னங்க அந்த மிக்கிதான் இப்ப உலகத்தையே கலக்கிய "மிக்கி மௌஸ்" கதாபத்திரம்.
சந்தர்ப்ப சூழ்நிலையோ பெரிய பிரச்சனையோ வரும்போதுதான் நமக்குள்ள இருக்குற அலாதியான பல திறமைகள வெளிபடுத்துது. நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்த்திய டிஸ்னி-க்கு அஞ்சலி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை