பாரதி பாடி சென்று விட்டாயே/#மஞ்சுளாயுகேஷ்

 











பாரதி பாடி

சென்று விட்டாயே


பாரினில் இன்னும்

மா மாற்றமில்லை


விஷ செடிகளை

வேரறுக்க எவருமில்லை


நேர்படப்பேசுதல் எளிதல்ல நையப்புடைத்தலும் 

அழகல்ல


நாளையேனும் விடியும் 

நம்பிக்கையில் நாங்கள்


பாரதியெனும்

பாரதம் போற்றும்


உலக மகாக்கவியே 

உன்னை நினைக்கையிலே


மிடுக்கு உடையும் 

எடுப்பு மீசையும்


தீப்பிழம்பு வரிகளும் 

தினம் பாடி


காலமதில் புகழோடு

 நின்று விட்டாய்


உன் பிறப்பு

எங்கள் விழிப்பு


காக்கை குருவி 

எங்கள் சாதியென்றவனே


காதல் மொழி

 பேசி நின்றவனே


புதுமைக் கவிஞனே

மண்ணுயிரை தன்னுயிராய் நேசித்தவனே


மதம் பிடித்த 

மனிதர் வாழும்


 நாட்டில் மத யானையிடம் உயிரிழந்தவனே


சதை பிண்டமாய் 

பெண்ணை வதைக்கும்


கூட்டமிங்கே ஆற்றுப்படுத்த

 ஆளில்லாது அழைக்கிறேன்


மீண்டும் வருவாயா 

மீண்டு வருவாயா.


#மனதின்ஓசைகள்

#மஞ்சுளாயுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,