எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் மௌனி.

 




ஜெயகாந்தனை தெய்வமாகக் கொண்டாடுபவர்கள் இன்றும் உண்டு. கடுமையாக விமர்சிப்பவர்களும் கணிசமாக உண்டு.

ஜெயகாந்தன் படைப்புகள் மீதான பொதுவான விமர்சனம் ஒன்றுண்டு. அது, `கதைகளில் வரும் எல்லா கதாபாத்திரங்களின் மீதும் இவரே ஏறி அமர்ந்துகொண்டு சொற்பொழிவாற்றுகிறார். கதாபாத்திரங்களை சுதந்திரமாக வாழவிட மாட்டார்' என்பது ஒன்று. கதைக்குள் தேவைக்கு அதிகமான சத்தம் இருக்கும் என்பது இன்னொன்று. அப்புறம் அவர் தமிழில் எழுதும் யாருடைய எழுத்தையுமே வாசித்ததில்லை. அதுபற்றி அவரே கூறுவது... ``நானோ எப்போதுமே பிற எழுத்தாளர்களைப் பற்றி ஏதும் சொன்னதில்லை. மூத்த எழுத்தாளர்களைப் பற்றி கருத்துகள் சொல்லும் வழக்கம் இல்லை. இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியதில்லை. அவர்களுக்கு உதவும் வகையில்கூட அதிகமாக ஏதும் சொன்னதில்லை. அதில் எனக்கு நம்பிக்கையில்லை.
விமர்சனத்தால் இலக்கியவாதிக்கு என்ன பயன்? பிறரை மனதில்கொண்டு நல்ல எழுத்தாளன் எழுதுவதில்லை. பிறர் சொல்வதை அவன் பொருட்படுத்துவதுமில்லை. என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை நான் கவனிப்பதே இல்லை. விமர்சனங்களால் வாசகர்களுக்கு வாசகச்சூழலுக்கு ஒருவேளை ஏதேனும் பிரயோசனம் இருக்கலாம்.”
அவர் இறப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் `இந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார்...
"இன்றைக்கு உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யார், என்ன காரணம்?''
"இன்றைக்கும் எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் மௌனி. நான் மொழியை ஆர்ப்பாட்டமாகப் பயன்படுத்தினேன் என்றால், அவர் ரகசியமாகப் பயன்படுத்தியவர். அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.''
ஜெயகாந்தன் தன்னை அறிந்தவராகவே இருந்திருக்கிறார். எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டு தமிழ்ச் சமூகத்தின் இரண்டு தலைமுறைகளை ஆட்டிப்படைத்த ராட்சசன் ஜெயகாந்தன் மட்டுமே என்பதை யாரும் மறுக்க முடியாது.
பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வார்த்தைகளோடு நிறைவுசெய்வோம்,
"இலக்கியத் தரமான சிறுகதைகள், ஜனரஞ்சகமாக அமைய மாட்டாது என்ற கருத்து தவறானது என்பதை சாதனையால் நிறுவியவர் ஜெயகாந்தன்.”
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,