முதல் பெண் மனநல மருத்துவர் எம்.சாரதா மேனன்
இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் எம்.சாரதா மேனன், 98, நேற்று காலமானார்*
.இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரான சாரதா மேனன், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி., படிப்பை முடித்தார்.
பின், கர்நாடக மாநிலம் பெங்களூரில் மனநல மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், 1961ம் ஆண்டு கண்காணிப்பாளராக சேர்ந்த அவர், 16 ஆண்டுகள் பணிபுரிந்தார். பணி ஓய்வுக்குப் பின், 1984ல் 'ஸ்கார்ப் இந்தியா' என்ற மன நோயாளிகளுக்கான அமைப்பை துவக்கினார்.பத்ம பூஷண் மற்றும் அவ்வையார் விருதுகள் பெற்றுள்ளார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார்.
Comments