*குழந்தைகள் ஸ்மார்ட் & ஷார்ப் ஆக இருக்க தூக்கமும் அவசியம்.*


*குழந்தைகள் ஸ்மார்ட் & ஷார்ப் ஆக இருக்க தூக்கமும் அவசியம்.* 
குழந்தைகள் நாள் முழுக்க உற்சாகத்துடனும் துடிப்புடனும் இருப்பார்கள். அவர்களைத் தூங்க வைப்பது பல தாய்மார்களுக்கு மிகவும் சவாலான காரியம்.குழந்தைகள் அமைதியாக இருக்க வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பம்... ஆனால் வீட்டை ஒரு வழி செய்யாமல் விட மாட்டார்கள் குழந்தைகள்.


குழந்தைகள் புத்திசாலித்தனத்துடன், மிகவும் உஷாராக, எதையும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது நம்முடைய விருப்பம். அதற்கு முதலில் அவர்கள் தூக்கத்தில் இருந்து கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


குழந்தைகள் தினமும் இரவு 9 - 10 மணிக்கு தூங்கச் செல்லும் வகையில் திட்டமிடுங்கள். இரவு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வது அவர்களின் உயிரி கடிகாரம் நல்ல முறையில் செயல்பட உதவும். இந்த பழக்கத்தை ஸ்டிரிக்டாக பின்பற்றுங்கள். ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாள் என்று எல்லாம் தளர்வுகள் அளிக்க வேண்டாம். இது குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும்.


உணவு உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே போன்று தூக்கமும் மிக முக்கியம் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். சரியான நேரத்துக்கு தூங்கச் செல்வது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். சரியான நேரத்தில் வேலையை முடித்துவிட்டு தூங்க வருவது எப்படி என்று கற்பது அவர்கள் கவனம் சிதறுவதைத் தவிர்க்க உதவும்.


தவிர்க்க முடியாத குடும்ப விழாக்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் அவர்கள் அதிக நேரம் கண் விழித்திருக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் வழக்கமான தூக்க நேரம் பாதிப்படையக் கூடாது. அவர்களின் சர்காடியன் ரிதம் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


வயதுக்கு ஏற்ப தூங்கும் நேரத்தை கட்டாயமாக்க வேண்டும். கைக் குழந்தைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குவார்கள். ஆனால் பள்ளி செல்லும் குழந்தை 8 முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கம் குறைவாக இருந்தால் அவர்கள் மன நிலையில், செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும். கவனக் குறைவு அதிகரிக்கும்.


நீண்ட நேரம் கார்ட்டூன் பார்ப்பது அவர்களின் எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மேலும், நீண்ட நேரம் மொபைல், டிவி பார்ப்பது கண்களுக்கும் கெடுதல். இவை எல்லாம் அவர்களை சோம்பேறிகளாக, நிஜ உலகத்தில் இருந்து விலகிவிடுபவர்களாக, அன்றாட வேலைகளை செய்ய முடியாதவர்களாக மாற்றிவிடுகிறது. இதற்கு பதில் ஓவியம் வரைவது, கைவினைப் பொருட்கள் செய்வது போன்றவற்றில் கவனத்தை செலுத்த விட வேண்டும்.*┈​​​​​​​​​​

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்