ஸ்காட்லாந்து அறிவியலாளர் சார்லஸ்மெக்கின்டோஷ்
ஸ்காட்லாந்து அறிவியலாளர் சார்லஸ் மெக்கின்டோஷின் 254 ஆவது பர்த் டே
தண்ணீர் புகாத ஆடைகளை கண்டுப் பிடித்த ஸ்காட்லாந்து அறிவியலாளர் சார்லஸ் மெக்கின்டோஷின் 254 வது பர்த் டே இன்னிக்கு தான்
அதாவது இப்போ மழை நாட்களில் வெளியே செல்ல சிறுவர் முதல் பெரியவங்க வரைக்கு நீர் புகாத ரெயின் கோட் அணிஞ்சு போறோமே. அந்த ரெயின்கோட் எனப்படும் நீர் புகா ஆடைகளை முதன் முதலில் உருவாக்கி, காப்பி ரைட்டோட வணிக ரீதியிலான உற்பத்தியையும் தொடங்கியவர் சார்லஸ் மெக்கின்டோஷ் என்ற வேதியியலாளர்.
அது சரி எப்படி உருவாக்கினார்..?
இளம் வயதில் பலரும் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டிவரும் நிலையில், வேதியியல் ஆய்வுகளில் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். அப்போது, நாப்தா எனப்படும் தாரின் உபபொருளானது, ரப்பரில் எளிதில் கரைவதை அவர் கண்டுபிடித்தார். பசை போன்ற இந்த புதிய கலவை தண்ணீரை விலக்கும் குணம் பெற்றிருந்ததையும் மெக்கின்டோஷ் கண்டறிந்தார்.
இதுத்தான் ரெயின்கோட் உள்ளிட்ட தண்ணீரை விலக்கும் ஆடைகளைத் தயாரிப்பதில் இந்த ஆய்வு பெரிதும் உதவியது. இந்த கலவையை துணிகளுக்கு மேல் வைத்து தைத்து முதல் நீர்புகா ஆடையை அவர் வடிவமைத்தார். இதற்காக அவருக்கு 1823ம் ஆண்டில் காப்புரிமை கிடைத்தது. வணிகரீதியில் தண்னீர்புகா ஆடைகளைத் தயாரித்த மெக்கின்டோஷ், 1843ம் ஆண்டு மறைஞ்சார்.
Comments