குழந்தை இல்லாத கைம்பெண்ணுக்கு பாரபட்சமான இந்து வாரிசுரிமை சட்டம்.

 குழந்தை இல்லாத கைம்பெண்ணுக்கு பாரபட்சமான இந்து வாரிசுரிமை சட்டம்.

 - சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்சொத்துரிமை விஷயத்தில் சட்டம் இன்றுவரை எந்தளவுக்குப் பெண்களுக்கு பாரபட்சமாக உள்ளது என்பதை, இந்து வாரிசுரிமை சட்டத்தில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது.


பெண்களுக்கு சொத்துரிமை பல்லாண்டு காலமாக மறுக்கப்பட்டு வந்தது. 1956-ல் பிறப்பிக்கப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்துப் பெண்களை சொத்தின் சம உரிமையாளராக அங்கீகரித்தது. ஓர் ஆணுக்கு நிகரான வாரிசுரிமை பெறவும், தன் கணவனின் சொத்து மற்றும் தன் தந்தையின் சொத்தை பெறவும் இச்சட்டத்தில் பெண்களின் வாரிசுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 


2005 இந்து வாரிசு (திருத்த) சட்டத்தின்படி, மகனைப் போலவே மகளையும் கூட்டுக் குடும்பத்தின் வாரிசாக அங்கீகரித்து சட்டம் இயற்றப்பட்டது.என்றாலும்,

65 ஆண்டுகள் பழமையான இந்து வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு இன்னும் முழுமையாகக் களையப்படவில்லை. குறிப்பாக, இந்து கைம்பெண்ணின் மரணத்துக்குப் பிறகான சொத்துப் பங்கீட்டில் சமத்துவம் இல்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை இதில் தலையிட்டு அரசு தலைமை வழக்கறிஞரான துஷார் மேத்தாவை, இந்து வாரிசுரிமைச் சட்டத்திலுள்ள குறைபாடுகள் பற்றிய மைய கருத்துகளை வழங்கக் கேட்டுக்கொண்டது.


நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஏ.எஸ்.போபண்ணாவு இது பற்றி அறுவுறுத்தியதாவது: ``இந்து வாரிசுரிமை சட்டப்படி, திருமணமான, குழந்தை இல்லாத இந்து ஆணின் மரணத்திற்குப் பிறகு அவரது சொத்துகள் அவரின் பெற்றோரிடம் சேர்கிறது.


ஆனால் அதுவே திருமணமான, குழந்தை இல்லாத இந்து கைம்பெண்ணின் மரணத்திற்குப் பிறகு, அவரின் பெற்றோரிடமிருந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட சொத்துகளைத் தவிர்த்து, அந்தத் தம்பதியின் சொத்துக்களானது அவர் பெற்றோரிடம் சேராமல், அவர் கணவரின் பெற்றோர், அல்லது கணவரின் உறவினர்களிடம் சேர்கிறது.


குழந்தை இல்லாத கைம்பெண்ணின் சொத்துகளில் கணவர், அல்லது கணவரின் உறவினர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்தப் பெண்ணின் சொத்தானது அவரின் பெற்றோர் அல்லது ரத்த உறவினர்களால் அவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அவரது மரணத்திற்குப் பிறகு கணவரின் தரப்பில் இருப்பவர்களுக்கே அந்தச் சொத்து சேர்வதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த சொத்து உரிமை வழிமுறை, சந்தேகத்திற்கு இடமின்றி பாரபட்சமானது. நான்கு வாரங்களுக்குள் இது குறித்து அரசின் கருத்தைப் பெறவேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞரிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Source : vikatan media


 வழக்கறிஞர். செல்வகுமாரி நடராஜன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்