பற்களை பாதுகாக்க எளிமையான பற்பொ

 😁பற்களை பாதுகாக்க எளிமையான பற்பொடி !!!😁



பற்களை பாதுகாக்க எளிமையான மருந்து இன்றைய நவீன பற்பசை மற்றும் பற்பொடிகளில் சுவைக்காக அதிகமாக இரசாயனத்தை கலப்பதால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி மிகவும் மோசமான நோய்களுக்கு நாம் உள்ளாகலாம். நம் முன்னோர்கள் நமக்காக மிக சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து பல அறிய மருந்துகளை அளித்து சென்றுள்ளனர். அந்த வகையில் பற்களை பாதுகாக்க சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து ஒரு தரமான பற்பொடியை எப்படி நம் வீட்டிலேயே தயாரிப்பது என்று பார்போம்.


கடுக்காய் பொடி 100 கிராம் – நாட்டு மருந்து கடைகளில் பவுடராக வாங்கி கொள்ளவும்

கிராம்பு 50 கிராம்

கல் உப்பு 25 கிராம்


இந்த கலைவையை அளவில் கூறவேண்டுமானால் ஒரு பங்கு கடுக்காய் அரை பங்கு கிராம்பு மற்றும் கால் பங்கு கல் உப்பு.


மேற் சொன்ன பொருட்களில் கிராம்பு மற்றும் உப்பை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு அதில் கடுக்காய் பவுடரையும் கலந்து கொள்ளவும். இப்பொழுது உங்களுக்கான தரமான பற்பொடி தயாராகிவிட்டது. பல் சொத்தை உள்ளவர்கள் இதை பற்பொடியாக தினந்தோறும் பயன்படுத்தினால் பல் சொத்தை இருப்பதையே மறந்துவிடுவார்கள். இதை அனுபவத்தில் பலரிடம் நான் கண்ட உண்மை.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,