*அல்சருக்கு தீர்வு தரும் பழங்கள்.**அல்சருக்கு தீர்வு தரும் பழங்கள்.*தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக 'பெப்டிக் அல்சர்' (Peptic ulcer) என்கிறோம்.இரைப்பையில் புண் ஏற்பட்டால் 'கேஸ்ட்ரிக் அல்சர்' (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் 'டியோடினல் அல்சர்' (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.


இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும். இதை 'இரைப்பை அழற்சி' (Gastritis) என்கிறோம். இதைக் காலத்தோடு கவனிக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பைப் புண்ணாக மாறிவிடும்.


நமது உடலில் செரிமானம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான வரப்பிரசாதம். நமது இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை பிரித்தெடுத்து நமது செரிமானத்துக்கு உதவுகிறது.


 


நமது இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் இருந்து வரும் தாக்குதலை காப்பாற்றி இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன


இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாத போதுதான் நமக்கு அல்சர் புண் (ulcer) ஏற்படுகிறது. அத்தகைய புண்ணானது மிகவும் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்தும் பொழுது நமக்கு தீராத வயிற்று வலியும், நெஞ்சு எரிச்சலும் ஏற்பட அதிக வாய்ப்புகள் அதிகம்


அல்சர் வர காரணங்கள்:


உணவகங்களில் மசாலா, காரம் நிறைந்த உணவை சாப்பிடும் பொழுதும், மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், மற்றும் புகை பிடித்தல், போன்ற காரணத்தினாலும் கணையத்தில் ஏற்படும் கட்டினாலும் இந்த அல்சர் ஆனது உருவாகக்கூடும்.


அறிகுறிகள்:


வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி துளிகளில் பசி ஏற்படுவது, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் வருவது, நெஞ்சு வலி, ரத்த வாந்தி, உடல் பருமன், சோர்வு, போன்றவையும் அறிகுறிகளாகும்


ஸ்ட்ராபெர்ரியில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலை அல்சரில் இருந்து பாதுகாக்கிறது. இது தவிர, இது வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது. எனவே அல்சர் குணமாக தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை மதிய வேளையில் சாப்பிடுங்கள்.


ஆப்பிள் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும் ஆப்பிளில் ஆப்பிளில் எச்.பைலோரியின் வளர்ச்சியைத் தடுக்கும் ஃபிளாவோனாய்டுகள் உள்ளன. ஆகவே அல்சர் இருக்கும் போது ஆப்பிள் சாப்பிட்டால், விரைவில் அல்சர் குணமாகும்.


ப்ளூபெர்ரியை காலையில் எழுந்ததும் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணைக் கட்டுப்படுத்த உதவும். இவற்றை உண்ணும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும் மற்றும் அல்சரில் இருந்து விரைவில் குணமாக உதவும்.


மாதுளை ஜூஸை குடிப்பது வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் எரிச்சலைக் குணப்படுத்தும். அதுவும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட ஒரு மணிநேரம் கழித்து சிறிது மாதுளையை அதன் மஞ்சள் தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண்கள் விரைவில் குணமாகுமாம்.


முலாம் பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் குளிர்விக்கும் தன்மை குடல் பிரச்சனைகளை சரிசெய்வதுடன், அல்சரையும் குணப்படுத்த உதவுகிறது.


பலாப்பழத்தில் அல்சரேட்டிவ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை அல்சரைக் குணப்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்சனைகள சரிசெய்யவும் உதவுகின்றது.


சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை. எனவே அல்சர் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால், விரைவில் வயிற்றுப் புண்களில் இருந்து விடுபடலாம்.*பகிர்வு*


*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,