குழந்தைகளுக்கான காய்கறி சூப்

 

குழந்தைகளுக்கான காய்கறி சூப் 





குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் இப்படி காய்கறிகளை வைத்து சூப் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

குழந்தைகள் காய்கறிகளை பார்த்தாலே ஓடி விடுகின்றனர். அதற்காக அவர்களுக்கு காய்கறிகளை கொடுக்காமல் இருக்க முடியாது. அதனால் குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் இப்படி காய்கறிகளை வைத்து சூப் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்


தேவையான பொருட்கள்


வெங்காயம் (நறுக்கியது) - 1 கப்


பூண்டு - 1 டீஸ்பூன்

கோஸ், கேரட், பீன்ஸ், காலிபிளவர் (நறுக்கியது) - ஒரு கப்

பச்சைப் பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்

கறுப்பு மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு, எண்ணை - 2 டீஸ்பூன்

வெண்ணை - 1 டேபிள் ஸ்பூன்

ஒயிட் சாஸ் தயாரிக்க:

பால் - 1 கப்

மைதாமாவு - 2 டீஸ்பூன்

சோளமாவு - 1 டீஸ்பூன்

வெண்ணை - 2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

சிறிய பிரஷர் குக்கரில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை போட்டுப் பொடியாக அரிந்த வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பொடியாக அரிந்த மற்ற காய்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து மேலும் சிறிது வதக்கி 5 கப் தண்ணீர் ஊற்றிக் கறுப்பு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடிக் கொதிக்கவிட்டு 2 விசில் விட்டதும் அணைக்கவும்.

விசில் அடங்கியவுடன் குக்கரை திறந்து வெந்த காய்களுடன் கூடிய தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். பிறகு வடிகட்டியில் தங்கியுள்ள காய்களை ஒரு மிக்சியில் 1 கப் தண்ணீருடன் நன்கு அரைத்து மீண்டும் வடிகட்டியில் போட்டுக் கசக்கி வடிகட்டவும். குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணை போட்டு மைதாமாவு சேர்த்து மிதமான தீயில் சிறிது வதக்கவும்.

சோள மாவை 2 டேபிள் ஸ்பூன் நீரில் நன்கு கரைத்து வதங்கும் மைதாமாவுடன் சேர்த்து மிதமான சூட்டுடன் கூடிய பாலை ஊற்றிக் கட்டி தட்டாமல் நன்கு கலந்து ஒரு கொதி கொதிக்கவிடவும். இதுவே ஒயிட் சாஸ் ஆகும். ஒயிட் சாசுடன் காய்கறிகளை வேகவிட்டு வடிகட்டிய நீரைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் சூடான காய்கறி சூப் ரெடி.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,