வெங்காயம், தக்காளி தேவையில்லை இப்படி சட்னி

 வெங்காயம், தக்காளி தேவையில்லை இப்படி சட்னி

வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காமல் அட்டகாசமான சுவையில் ஒரு ஆரோக்கியமான கறிவேப்பிலை சட்னி ரொம்பவே சுலபமாக இப்படி செய்து பார்க்கலாம். கறிவேப்பிலையில் இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் கண் பார்வையும், தலை முடி பிரச்சனையையும் எளிதாக தீர்க்க வல்லது. ஆனால் அதனை சாப்பாட்டில் பலரும் தேவையில்லாத ஒரு பொருளாக ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இப்படி சுவையாக சட்னி அரைத்து கொடுத்துப் பாருங்கள், இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்பார்கள்


கறிவேப்பிலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்: சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 4, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, புளி – ஒரு சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவைக்கு ஏற்ப, தேங்காய் துருவல் – அரை கப், பூண்டு – 2, தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று.


கருவேப்பிலை சட்னி செய்முறை விளக்கம்; முதலில் கருவேப்பிலை சட்னி செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை தோல் இல்லாமல் பூப்போல அரை கப் அளவிற்கு துருவி வைத்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலையை பச்சையாக எடுத்து அதை கழுவி உருவி சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். உளுந்து நன்கு வறுபட்டதும் அதனுடன் நீள நீளமாக இருக்கும் நான்கு வர மிளகாய்களை எடுத்து காம்புகள் நீக்கி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு நீங்கள் எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கறிவேப்பிலை இலைகள் சுருள வதங்கியதும். 2 பல் பூண்டை தோலுரித்து சேர்த்து வதக்குங்கள். பின்னர் ஒரு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை சேர்த்துக் கொள்ளுங்கள். புளி சேர்த்தால் தான் சட்னி ருசியாக இருக்கும் எனவே இதனை தவிர்த்து விடாதீர்கள்


இவைகள் வறுபட்டதும் அரை கப் அளவிற்கு தேங்காய் துருவலை சேர்த்து சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு ஒரு முறை பிரட்டிவிட்டு பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு விட வேண்டியது தான். இந்த பொருட்களெல்லாம் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த சுவையான கறிவேப்பிலை சட்னிக்கு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்! முதலில் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி சுடச்சுட இட்லி, தோசையுடன் பரிமாற வேண்டியது தான். இதே முறையில் நீங்களும் முயற்சி செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடுங்களேன். கறிவேப்பிலையில் இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் நமக்கு நேரடியாக மற்ற உணவு வகைகளில் கிடைக்கா விட்டாலும் இது போல் சட்னி, துவையல் என்று கறிவேப்பிலையை செய்து சாப்பிட்டு வந்தால் அதன் சத்துக்கள் முழுமையாக உடலை சென்றடையும். இதன் மூலம் ஆரோக்கியம் மேலும் பலம் பெரும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,