புருஷன் என்பவன் ‘சகப்பயணி’

 



பெண்கள் ஒருகாலத்தில் மாப்பிள்ளைகளுக்காகத் தயாரிக்கப்பட்டார்கள். ஆனால், இப்போது அவர்களிடம் படிப்பறிவு, கல்வி அறிவு மிகுந்து இருக்கிறது. இப்போதைய பெண்கள் சட்டென்று ஏதோ ஒரு கிளர்ச்சியில் காதலில் விழுவது இல்லை. நிறைய யோசிக்கிறார்கள். ஆண்கள் உடைக் கட்டுப்பாடு கொண்டுவரும்போது எதிர்க்கிறார்கள். இது வரவேற்கவேண்டிய விஷயம். பெண்களுக்கு ஒழுக்கம் சொல்பவர்கள், பெரும்பாலும் யோக்கியர்கள் இல்லை. புருஷன் என்பவன் ‘சகப்பயணி’ என்ற ஆரோக்கிய நிலை உருவாகி இருக்கிறது. இன்றைய பெண்கள் ‘தாலி மகிமை’ பற்றி பேசாதவர்களாக, அதே சமயம் அன்பை ஆதாரமாகக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் அரசியல்மயப்படுகிறார்கள். இது மிக நல்ல விஷயம். பெண்களின் உலகம், வீடு அல்ல; எல்லை, புருஷன் அல்ல; நோக்கம், குழந்தை பெறுவது அல்ல… என்ற புதிய ஞானம் தோன்றியிருக்கிறது!”

- பிரபஞ்சன்
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,