உங்க வீட்ல ஏலக்காய் இருந்தால் போதும். போதும் போதும் என்கிற அளவுக்கு அழகு வந்திடும்.
நிறைய அழகு வேண்டும். அதற்கு உங்க வீட்ல ஏலக்காய் இருந்தால் போதும். போதும் போதும் என்கிற அளவுக்கு அழகு வந்திடும்.
தினமும் இரவு தூங்கச் செல்லும் போது, இந்த ஜெல்லை உங்களுடைய முகத்தில் அப்ளை செய்து கொண்டு தூங்கச் சென்றால் போதும். மறுநாள் காலை உங்களுடைய முகம் பளபளப்பாக மின்னும். அதாவது உங்களுக்கு இருக்கக் கூடிய சரும பிரச்சனையின் காரணமாக முகம் பொலிவிழந்து காணப்படும் பட்சத்தில், பின் சொல்லக்கூடிய இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். ஒவ்வொரு நாள் இரவும் இதை நீங்கள் பயன்படுத்தும் போது, ஒரு வித்தியாசம் நிச்சயமாக உங்களுடைய முகத்தில் தெரியத் தொடங்கும். உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய, மிக எளிமையான பொருட்களை வைத்து இந்த ஜெல்லை தயார் செய்யலாம். வாங்க அந்த நைட் கிரீமை எப்படி தயார் செய்வது என்று பார்த்துவிடுவோம்.
அடுப்பில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். அதில் 10 ஏலக்காய்களை நன்றாக நசுக்கி போட்டு கொதிக்க வைக்கவேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் தண்ணீராக சுண்டி வரவேண்டும் ஏலக்காய் எசன்ஸ் அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும். இப்போது இந்த தண்ணீரை நன்றாக ஆற வைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.
அரை தம்ளர் அளவு அல்லது கால் டம்ளர் அளவு நமக்கு இந்த ஏலக்காய் எசன்ஸ் நிறைந்த தண்ணீர் கிடைத்தால் போதும். தண்ணீர் நன்றாக ஆரட்டும். அந்த தண்ணீரில் 2 ஸ்பூன் அளவு அலோ வேரா ஜெல் சேர்த்து அடித்து நன்றாக கலக்குங்கள். க்ரீமி பக்குவத்திற்கு உங்களுக்கு ஒரு ஜெல் கிடைத்திருக்கும். இந்த ஜெல்லை கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து வைத்தால் 7 நாட்கள் வரை கெட்டுப் போகாது
தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த கிரீமை உங்களுடைய விரல்களால் தொட்டு முகம் முழுவதும் ஆங்காங்கே சின்ன சின்ன புள்ளிகளாக வைத்து, அதன்பின்பு உங்களுடைய இரண்டு கைகளையும் முகத்தில் வைத்து வட்ட வடிவில் இரண்டு நிமிடம் போல நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அவ்வளவு தான், முகத்தில் கிரீம் போட்டதே தெரியாது. க்ரீம் அனைத்தும் உங்களுடைய முகம் உறிஞ்சி இருக்கும். அப்படியே தூங்கச் சென்றுவிடுங்கள். வழக்கம்போல மறுநாள் காலை எழுந்து முகம் கழுவிக் கொள்ளலாம்.
ரொம்ப ரொம்ப ஈஸியா தயார் செய்யக்கூடிய ஜெல் இது. நைட்ல மட்டும் தான் இதை முகத்திற்கு போட வேண்டுமா? நிச்சயம் கிடையாது. நீங்க வீட்ல இருக்கீங்கன்னா, பகலிலும் இதை உங்களுடைய முகத்தில் போட்டுக்கலாம். முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் தழும்புகள் சுருக்கங்கள் மறைவதற்கு இந்த ஜெல் மிகமிக உபயோகமானதாக இருக்கும்.
நிறைய செலவு செய்ய வேண்டாம். பக்கவிளைவுகள் வந்து விடுமோ என்று பயப்பட வேண்டாம். இதில் செயற்கையா நாம் எதுவுமே சேர்க்க போவது கிடையாது. அலோ வேரா ஜெல் யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் தான். ஏலக்காய் நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருள். இது இரண்டுமே நம் சருமத்திற்கு நன்மை தரக்கூடிய விஷயங்கள் தான். ஆக பயப்படாதீர்கள். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த டிப்ஸை தொடர்ந்து ஒரு மாதம் ட்ரை பண்ணி பாருங்க
courtesy:https://dheivegam.com/elakkai-gel-for-face/
Comments