கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள்

 ஜீரோவின் ஹீரோ! : இன்று கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள்

ஈரோட்டில் பிறந்து இங்கிலாந்தில் கணிதத் துறையில் உச்சம்தொட்டவர் ராமானுஜன். கணிதம் சம்பந்தப்பட்ட நுாலினை 13 வயதில் இரவல் வாங்கி படித்தது முதல் அவரது மனம் கணிதத்தில் லயித்தது. இளைஞர் பருவத்தில் சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை பார்த்தார். லண்டனில் பிரபல கணித அறிஞர் ஹார்டிக்கு, தன்னுடைய கணித ஆர்வம் பற்றியும், மாணவராக சேர்ந்து பயில்வதற்கான விருப்பத்தையும் கடிதம் மூலம்எழுதினார். இந்திய மாணவர் சேர்க்கை அலுவலகம் மூலம், சென்னையில் வேலை பார்த்த ராமானுஜத்தின் அலுவலகத்திற்கு ஹார்டியின் இசைவு கடிதமும் அனுப்பப் பட்டது.ஆனால், ராமானுஜத்தின் குடும்ப சூழல் பற்றி நன்கு அறிந்த மற்றும் உடன் பணிபுரிந்த நாராயண அய்யர், 'கடல் கடந்து செல்ல அக்கால பிராமணர்களுக்கு பழக்கம் இல்லை' என்பதை மனதில் வைத்து, 'நுழைவு இசைவு கிடைக்கவில்லை,' என்று ராமானுஜத்திடமும், 'சென்னையில் இருந்த இங்கிலாந்து மாணவர்கள் சேர்க்கை அலுவலகத்திற்கு கடிதமும் எழுதிவிட' ராமானுஜத்தின் வறுமையும் வளர, அவரது வெளிநாடு செல்லும் கனவு தகர்ந்தது.
சம்பளம் ரூ.75 : சென்னை துறைமுகத்தில் பணியில் இருந்த போதே ராமானுஜம் தன்னுடைய கணித பயிற்சிக்கும், சிந்தனைக்கும் அதிக கவனம் செலுத்தியதால் வறுமையில் வாடினார். தாமஸ் வாக்கர் என்ற பிரிட்டிஷ் அதிகாரி சென்னை வந்தபோது துறைமுகஅதிகாரி, ராமானுஜத்தை பற்றி எடுத்துக்கூறியதால், சென்னை பல்கலை மாதந்தோறும் 75 ரூபாய் ஊக்க தொகையோடு கணித ஆராய்ச்சி செய்ய வாய்ப்பும் வழங்கியது. ராமானுஜத்தின் கணித அறிவு 'குன்றில் இட்ட விளக்காய்' சுடர் விட்டு பிரகாசிக்க இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள அறிஞர்களும் இவரது தொடர்பை விரும்பினர். சென்னையில் இருந்து ராமானுஜம் லண்டன் செல்லும் ஏற்பாடுகளையும் அறிஞர் ஹார்டி செய்தார். ஈரோட்டில் 1887ம் ஆண்டு டிச.,22ல் ஏழை அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சீனிவாசன்; தாயார் கோமளம்வல்லி. தந்தை துணிக்கடையில் கணக்காளராக இருந்தார். ஏழு வயதில் ஸ்காலர்ஷிப் பணம் பெற்று கும்பகோணத்தில் கல்வி பயின்றார்.
சாதித்த பள்ளி பருவம் : பள்ளி பருவத்திலேயே பல கணித இணைப்பாடுகளை (பார்முலா) மனப்பாடம் செய்து ஒப்புவித்தலில் திறன் பெற்று, கலைமகளின் பூரண அருள் பெற்றவராக ஆனார். 'பை' யின் மதிப்பை பல தசமத்தில் நண்பர்களிடம் தெளிவாக சொல்லி புரியவைத்துள்ளார்.குழந்தை பருவத்தில் மூன்று வயது வரை இவருக்கு பேசும் சக்தி வரவில்லை. அப்போது காஞ்சிபுரம் சென்று திண்ணை பள்ளிக் கூடத்தில் பால பாடங்களை கற்றார். இங்கு பிறப்பு குறைபாடு உள்ள குழந்தைகள் பலர் சாதனை புரிந்த செய்தி உலகம் அறிந்ததே. எப்.ஆர்.எஸ்., பட்டம்: 'பை' என்பதுவட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்தால் வரும் ஓர் இலக்கம். இதை 'பை' (22/7) என குறிப்பிடுவார். 1915ல் ராமானுஜம் உருவாக்கிய கோட்பாடு, 1987ல் கணித அறிஞர்களால் தொடர வழி வகை செய்தது. 1917 ம் ஆண்டு இங்கிலாந்து பல்கலை எப்.ஆர்.எஸ்., (FRS) பட்டம் ராமானுஜத்திற்கு வழங்கியது. டிரினிடி கல்லுாரி 'பெல்லோஷிப்' பெற்றும் பெருமையும் சேர்த்தார். தனது வாழ்நாளில் ஆறாயிரம் தேற்றங்கள் அடங்கிய நுாலினை எழுதி, அறிஞர்களை வியக்க செய்தவர் இவர். 'ஜீரோவிற்கும் மதிப்புண்டு' என கூறியவர். சிறிய வயதில் இருந்து தெய்வ பக்தியில் திளைத்தவர். அதனால்தான் லண்டன் செல்ல வாய்ப்பு கிடைத்ததும், தமது குல தெய்வமான நாமக்கல் தாயார் சன்னதி சென்று உத்தரவு பெற்று சென்றார்.
கணித விடைகளை தேடி...: தனது மனைவியோடு வாழ்ந்தாலும் இவருக்கு இருந்த சிந்தனையால், கணித விடைகளை தேடியே வாழ்க்கை முறை அமைந்து விட்டது. ரோசர்ஸ் என்ற ராமானுஜரின் கணித கண்டுபிடிப்புகள் தொடர்பான நுால் வெளியிட, ஜி.எச். ஹார்டி உதவி செய்தார். 32 வயதில் காச நோயால் பாதிக்கப்பட்டார். ஏப்.,26 1920ல் கும்பகோணத்தில் உயிர் துறந்தார். லிட்டில்வுட் என்ற அறிஞர், ''18ம்நுாற்றாண்டை சேர்ந்த ஸ்விட்சர்லாந்தின் எய்லர் மற்றும் 19ம் நுாற்றாண்டின் ஜகோபின் ஒன்று சேர்ந்த உருவம் ராமானுஜம்,'' என போற்றியுள்ளார். 1962ம் ஆண்டு மத்திய அரசு, ராமானுஜத்தின் 75 வது பிறந்த நாளில் அஞ்சல் தலையை வெளியிட ஒரே நாளில் விற்றுத் தீர்ந்ததும், 'ஜீரோ'விற்கு மதிப்பு அறித்தவரின் பெருமையை சொல்லியது.
நன்றி: தினமலர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,