உலகளாவிய தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான "இன்றைய இளம் பாரதிகள்" நிகழ்ச்சி

 
ஐக்கிய இராச்சியத்தில், உலகளாவிய தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான மகாகவி பாரதியாரின் 139வது பிறந்தநாளை முன்னிட்டு "இன்றைய இளம் பாரதிகள்" நிகழ்ச்சி இணைய வழியூடாக 12/12/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர், மலேஷியா, பின்லாந்து, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள் பாரதியின் வேடம் அணிந்து பாரதியாரின் கவிதைகளை பாடி திறமைகளை வெளிப்படுத்தினர்.


 இந்நிகழ்ச்சியை உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் நிறுவனர் திருமதி. உமா அசோக் மற்றும் இணை நிறுவனர் திருமதி. ராதிகா ஹரீஷ் ஆகியோர் சிறப்பாக நடத்தினர்.

மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி 


இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், வாழும் பாரதி. இசைக்கவி. ரமணன் அவர்கள் மற்றும் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் பங்குபெற்றனர்.வாழும் பாரதி. இசைக்கவி. ரமணன்


                                                          திருமதி. பாரதி பாஸ்கர்


திரு. சிவா பிள்ளை (Chariman, British Tamil Examination Board & TamilStudiesUK – EC Member) அவர்கள் தலைமையில் மரு. எழில் ஆனந்த் அவர்கள்  (Founder, BITR) வாழ்த்துரை வழங்கினார்.

திரு. சிவா பிள்ளை

பிரித்தானிய தமிழ் இந்திய வானொலி நிறுவனர் மருத்துவர் திரு.எழில் ஆனந்த்


மேலும் இந்நிகழ்ச்சியில் நடுவராக திரு. கண்ணன் சேஷாத்ரி அவர்கள், திரு. மஸ்கட். மு. பஷீர் அவர்கள், திருமதி. மாதவி சிவலீலன் அவர்கள், திருமதி. சுகன்யா குணசேகரன் அவர்கள் மற்றும் திருமதி. பிரியா பாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இந்த நிகழ்ச்சியின் நிகழ்வினை காண 

லிங்க்  https://fb.watch/9SVc8fUDPD/


தகவல் மற்றும் செய்தி பகிர்வு: 
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,