பத்து நிமிடத்தில் சுவையான ஆரோக்கியம் மிகுந்த இந்த பூண்டு சாதம்

 பத்து நிமிடத்தில் சுவையான ஆரோக்கியம் மிகுந்த இந்த பூண்டு சாதம்
ஆரோக்கியம் மிகுந்த இந்த பூண்டு சாதத்தை அடிக்கடி செய்து கொடுத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும். தொடர் சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்களுக்கு பூண்டு சாதம், மிளகு சாதம் போன்ற ஆரோக்கியம் நிறைந்த இந்த கலவை சாதங்களை அடிக்கடி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள், மேலும் நோய் காக்கும் மருந்தாகவும் செயல்படும். அந்த வகையில் நம் உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றி உடலை சுத்தம் செய்யும் இந்த பூண்டினை கொண்டு சுவை மிகுந்த இந்த கலவை சாதத்தை ரொம்பவே சுலபமான முறையில் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.


பூண்டு சாதம் செய்ய தேவையான பொருட்கள் நெய் – 2 டேபிள்ஸ்பூன், பூண்டு பற்கள் – ஒரு கைப்பிடி, பட்டை – இரண்டு துண்டு, கிராம்பு – ஐந்து, ஏலக்காய் – 5, வர மிளகாய் – 6, புதினா – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்.


பூண்டு சாதம் செய்முறை விளக்கம்: முதலில் இந்த பூண்டு சாதத்திற்கு சாதத்தை உதிரி உதிரியாக வடித்துக் கொள்ள வேண்டும். உங்கள் அரிசிக்கு ஏற்ப எந்த அளவிற்கு உதிரியாக வடித்துக் கொள்ள முடியுமோ, அது போல் வடித்து வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு கலந்து உதிரி உதிரியாக ஆற வைத்து விடுங்கள்.


அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவு நெய் ஊற்றி காய விடுங்கள். நெய் நன்கு காய்ந்ததும் மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும். கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை சேர்த்து தாளித்தம் செய்யுங்கள். பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டை உரித்து கொள்ளுங்கள். அதனை உரலில் இட்டு ஒன்றுக்கு இரண்டாக நன்கு இடித்துக் கொள்ளுங்கள்.


கொள்ளுங்கள். குழந்தைகள் என்றால் குறைவாகவும், பெரியவர்கள் என்றால் அதிகமாகவும் உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவை நன்கு வறுபட்டதும் ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகளை அலசி தண்ணீர் இன்றி சேர்த்துக் கொள்ளுங்கள். புதினா இலைகள் நன்கு சுருள வதங்கியதும், அதில் தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். பின்னர் உதிர்த்து வைத்துள்ள சாதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.


ஒரு டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாற்றை ஊற்றி சாதத்தை நன்கு எல்லாவற்றிலும் கலந்து விடும் படி கரண்டியால் கலந்து கொடுங்கள். இப்போது அடுப்பை அணைத்து நறுக்கிய மல்லித் தழையை மேலே தூவி அலங்கரிக்கலாம். இதில் ரொம்பவே குறைந்த பொருட்களை கொண்டு தான் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சுவை மற்றும் ஆரோக்கியம் அள்ள அள்ள குறையாமல் கிடைக்கும். அவ்வளவு தான்Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,