பிஸ்தா

 குளிர் காலத்தில் பிஸ்தாவை ஏன் ஸ்நாக்ஸாக சாப்பிட வேண்டும்?
சிறந்த ஆரோக்கியமான விஷயங்கள் சில நேரங்களில் சிறிய பேக்கேஜில் கிடைக்கும் என்று கேள்விப் பட்டிருப்போம்.நட்ஸ் விஷயத்தில் இது உண்மையாகிறது. அளவில் சிறியவையாக இருந்தாலும் இவை தரும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பலன்கள் மிக பெரியவை. மேலும் இவை சிறந்த மிட்-மீல் ஸ்னாக்ஸ்களாகவும் கருதப்படுகின்றன. பாதாம், அக்ரூட் பருப்புகள், பைன் நட்ஸ், ஹேசல்நட்ஸ், முந்திரி போன்றவற்றை போலவே பிஸ்தா பருப்பும் பல்வேறு நன்மைகளை கொண்டது.


 


பச்சை பாதாம் என்றும் அழைக்கப்படும் பிஸ்தா மத்திய ஆசியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட ஆசியாவின் பல பகுதிகளில் வளர்கிறது. மழைக்காலம் முடிந்து குளிர்காலம் துவங்கி இருக்கும் நிலையில் பிஸ்தா போன்ற சத்தான பொருட்களை டயட்டில் சேர்ப்பது, நம் நோயெதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட தேவையான முக்கிய வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்களை நம் உடலுக்கு அதிக அளவில் வழங்க உதவும்.


 


உணவுக்கு இடையில் பசி ஏற்படும் போது அதிக கலோரி கொண்ட தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு வழக்கமான உணவு நேரத்தில் சாப்பிட முடியாமல் தவிப்பவர்கள் நீங்கள் என்றால், உங்களுக்கான ஒரு சிறந்த ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாக இருக்கவே இருக்கிறது பிஸ்தா. இது இந்த குளிர்காலத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.


 


இந்த அற்புதமான பிஸ்தாக்களில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் குறிப்பாக லுடீன் (lutein) நம் கண் பார்வைக்கு சிறந்த பலனை தரும் என்று மகிஜா ஒரு வீடியோவில் கூறி இருக்கிறார். மேலும் பிஸ்தாக்களில் நிறைந்துள்ள பி6 பைரிடாக்சின் (B6 pyridoxine), மாதவிடாய்க்கு முந்தைய வயிற்று பிடிப்பு பிரச்சனைகளுக்கு தீர்வாக சிறந்த ஊட்டச்சத்தை அளிக்கிறது. அதோடு பிஸ்தாக்கள் கொலஸ்ட்ரால் இல்லாதவை மற்றும், நார்ச்சத்து நிறைந்தவை.


 


நம் குடல் பாக்டீரியாக்களுக்கு சிறந்தது மற்றும் மிக முக்கியமாக இது ஒரு ஆரோக்கியமான புரத சிற்றுண்டி என்று கூறி இருக்கிறார் ஊட்டச்சத்து நிபுணரான பூஜா. 2020-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கலிஃபோர்னியா பிஸ்தாக்கள் குயினோவா மற்றும் சோயாபீனுடன் ஒரு முழுமையான வீகன் புரோட்டின் என்று கூறுகிறது. வைட்டமின் B6, துத்தநாகம், தாமிரம், இரும்பு, செலினியம், ஃபோலேட், பாலிபினால்கள், கரோட்டினாய்டுகள், நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளிட்ட நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு உதவ கூடிய பல ஊட்டச்சத்துக்களை பிஸ்தாக்கள் வழங்குவதால் குளிர்காலத்தில் பிஸ்தாவை சிற்றுண்டியாக எடுத்து கொள்வது சிறந்த பலன்களை தரும்.பகிர்வு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி