மொறு மொறுப்பான முருங்கை கீரை வடை

 மொறு மொறுப்பான முருங்கை கீரை வடை...


பாரம்பர்யமான உணவு வகைகளிலும், சிற்றுண்டி வகைகளிலும் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக நாம் இன்றைக்கு தெருதோறும் தேநீர் கடைகளில் சாப்பிடும் உளுந்து வடை உடலுக்கு நல்லது. அதிலும் அதில் சத்துகள் நிறைந்த முருங்கைக் கீரையை போட்டு செய்தால் எப்படி இருக்கும். வாங்க அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்...
மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று முருங்கை கீரை சேர்த்து மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - கால் கப்

உளுந்து - அரை கப்


ஆய்ந்த முருங்கை கீரை- 1 கைப்பிடி

எள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கு

பெரிய வெங்காயம் - 1

பச்சைமிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு



செய்முறை

உளுந்து, அரிசியை ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைத்து கொள்ளவும். முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைத்த மாவில் முருங்கை இலை, உப்பு, எள், பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான சுவையான முருங்கைக்கீரை வடை ரெடி.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி