தேசிய விவசாயிகள் தினம்

 தேசிய விவசாயிகள் தினம்விவிசாயி

வைகரையில் நீயெழுந்து 

வயலுக்கு போகையில 


பொழுது புலருதென்று 

சேவலுக்கும் சொன்னவனே 


எருதுகளை நீபூட்டி 

ஏர்உழுவும் பேரழகை 


கதிரவனும் காணத்தான் 

காலையிலே எழுந்தானோ 


நாத்துநடும் வேளையில 

உழர்தியர்தம் குலவையில 


வாய்க்காலின் கெளுத்திகளும் வரப்பினிலே துள்ளிவிழ


வளர்ந்துவரும் கதிரெல்லாம் 

நெஞ்ச நிமித்திநின்னு 


வாலிபனின் வீரத்தை 

வம்புக்கு இழுப்பதென்ன 


வளர்ந்து விட்ட 

நெற்கதிரோ தலைகுனிஞ்சி 


வயதான விவசாயி 

முதுகெலும்பாய் ஆனதென்ன 


பயர்காக்க களையெடுக்கும்

 பசுமை காவலனே 


களையெடுக்க 

ஆருடம்தான் சொல்வீரோ


கவிதாயினி

-மஞ்சுளா யுகேஷ்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,