நான் தேடிய தேவதை/கவிதை
நான் தேடிய தேவதை
நீயோ.. தொலைத்தேன் என்று நினைத்தேன் ஆனால் இவ்வளவு நாள் உன்னில் என்னை தொலைத்தேனோ .. கடந்து செல்ல நினைத்தேன் கடக்க முடியவில்லை உன்னை கடக்கும் பொழுது கண்கள் களவாடி செல்லும் வித்தையை எங்கே கண்டுபிடித்தாய்.. மெல்லினமனாய் மிளிரும் உனதனழகு செவ்விதழ்களோ ரோஜாக்களோடு போட்டி போடுகின்றன.. உன் சிரிப்போ கொட்டிய முத்துகளாய் சிதறி கிடக்கின்றன.. உன் மனமோ மல்லிகையாய் மணம் வீசுகின்றது .. குவிந்த உன் கன்னகுழியில் விழுந்து கிடக்கின்றேன் .. உன் காலடி தடத்தில் நடைபயில ஆசை .. கலா
Comments