கத்திரிக்காய் சட்னி

 கத்திரிக்காய் சட்னி  இட்லி, தோசைக்கு வித்தியாசமான சட்னி  என்ன செய்வதென்று தெரியவில்லையா? 

உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான கத்திரிக்காய் சட்னியை செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.  செய்முறை  

தேவையான பொருட்கள்: * எண்ணெய் - 1 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் * வரமிளகாய் - 3 * பூண்டு - 4 பல் (நறுக்கியது) 

 பெரிய கத்திரிக்காய் - 1 (நறுக்கியது) * மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப * புளி - 1 சிறிய அளவு * தண்ணீர் - தேவையான அளவு * சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு... * நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் * கடுகு - 1 டீஸ்பூன் * உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் * பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை * கறிவேப்பிலை - சிறிது செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். * பின்னர் அதே வாணலியில் கத்திரிக்காய் சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். * பின்பு அதையும் பூண்டு அரைத்த மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். * பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். * அடுத்து, அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கத்திரிக்காய் சட்னி தயார். 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்