கருப்பு உளுந்து சுண்டல்

 எலும்புகள் வலு பெற, வாரம் ஒரு முறை பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கருப்பு உளுந்து சுண்டல் செய்வது எப்படி?
பெண்கள் மட்டும் தான் இந்த கருப்பு உளுந்து சுண்டலை சாப்பிட வேண்டுமா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, முதியவர்கள் கூட வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த கருப்பு உளுந்து சுண்டல் சாப்பிடலாம். 


எலும்புகள் வலுப்பெறும். இடுப்பு வலி மூட்டு வலி வராமல் இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊட்டச்சத்து அதிகம் தேவை. மகப்பேறு காலங்களில் அவர்களுக்கு அதிகப்படியான வலியை தாங்கும் சக்தி தேவை. 


இதனால் இந்த கருப்பு உளுந்தை வாரத்தில் ஒரு நாளாவது கட்டாயமாக பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கறுப்பு உளுந்து சுண்டல், உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி, எப்படி நீங்கள் உணவில் சேர்த்துக் கொண்டாலும் சரி தான். 


கருப்பு உளுந்தை சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கருப்பு உளுந்தை வைத்து சுண்டல் செய்வது எப்படி தெரிஞ்சுக்கலாம் வாங்க. 


கருப்பு உளுந்தை 1 கப் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் அந்த உளுந்தை போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வறுத்தால் போதும். வறுத்த இந்த உளுந்தை ஒரு முறை நன்றாக கழுவி விட்டு, 1 கப் அளவு கருப்பு உளுந்துக்கு, 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரில் போட்டு 3 விசில் வைக்க வேண்டும்.


சில உளுந்து மூன்று விசில் வைத்தாலே பூப்போல வெந்துவிடும். சில உளுந்து வேக இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும். 


அது உளுந்தின் ரகத்தைப் பொறுத்தது. மூன்று விசிலில் உங்கள் உளுந்து வேகவில்லை என்றால் மீண்டும் குக்கரை மூடி போட்டு 2 விசில் விட்டு கொள்ளுங்கள். 


உளுந்து வேக வைக்கும்போது சிறிதளவு உப்பையும் போட்டு வேகவைத்துக் கொள்ளவேண்டும். வேகவைத்த இந்த உளுந்து அப்படியே இருக்கட்டும்.


அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், இரண்டாக கிள்ளிய வரமிளகாய் – 4, கறிவேப்பிலை – 2 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், பொடியாக துருவிய இஞ்சி – 1/2 ஸ்பூன், சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 15 பல், சேர்த்து வெங்காயத்தை நன்றாக வதக்கி விட்டு, இரண்டு கைப்பிடி அளவு தேங்காய் துருவலை போட்டு வதக்கி விட்டு, வெங்காயத்துக்கு மட்டும் 2 சிட்டிகை உப்பு தூளை தூவி, இறுதியாக வேக வைத்திருக்கும் சுண்டலை தண்ணீரை வடிகட்டி இந்த கடாயில் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டி சூடு செய்து உப்பு சரி பார்த்து கொண்டு அடுப்பை அணைத்து விடுங்கள். 


அவ்வளவு தான். சுடச்சுட கருப்பு சுண்டல் தயார். இந்த சுண்டலை சூடாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அப்படியே சாப்பிடலாம்.


பருப்பை ரொம்ப ரொம்ப கொழகொழவென வேக வைத்து விட்டாலும் சுண்டல் சுவையாக இருக்காது. உங்களுக்கு இந்த சிம்பிளான ஆரோக்கியமான ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,