மாஸ்க் போடாமல் பேருந்தில் ஏறியது தவறுதான்

 விழுப்புரத்தில் தடுப்பூசி குறித்து பேருந்தில் இருந்த மக்களுடன் உரையாடியபோது மாஸ்க் அணியாமல் இருந்தது தவறுதான் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருத்தம் தெரிவித்துள்ளார்.அதிகாலையில் ஜாக்கிங் செல்லும்போது மூச்சு விடுவது சிரமம் என்பதால்தான் மாஸ்க் அணியவில்லை என்றும் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.


விழுப்புரத்தில் பேருந்தில் ஏறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி குறித்து மக்களிடம் கேட்கும்போது முகக் கவசம் அணியவில்லை என சில பத்திரிகைகளில் செய்தி வெளியானதை அடுத்து விளக்கம் அளித்துள்ளார்

திமுக இளைஞர் அணி செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் சைதாப்பேட்டையில் கொண்டாடப்பட்டது. சுப்பிரமணியம் தெருவில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று நலத்திட்ட உதவிகளை பெற்று சென்றனர். 5 கிலோ பொன்னி அரிசி உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.


நிகழ்ச்சிக்குபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், "ஹை ரிஸ்க் என்று பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்தவர்களில் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி ஆனது. திருச்சி வந்த ஒருவருக்கும், நாகர்கோவில் வந்த 2 பேருக்கும் சென்னை வந்த நால்வருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த பெண் ஒருவர் பைசர் தடுப்பூசி 2 டோஸ் போட்டிருந்தார். ஆனாலும் அவருக்கு பாசிட்டிவ் என முடிவு வந்ததால் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவருக்கு மீண்டும் கொரோனா டெஸ்ட் எடுத்தபோது நெகடிவ் வந்துள்ளது. தற்போது கும்பகோணத்தில் உள்ள அவரது வீட்டில் 7 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.


ஓமிக்ரான் தமிழகத்தில் இல்லை இந்த 7 பேரில் 5 பேருக்கு டெல்டா வகை கொரோனா தான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து நாகர்கோவில் வந்த ஒருவரின் மாதிரி ஆய்வில் உள்ளதால் அதன் முடிவுகள் பின்னர் தெரிய வரும் என அமைச்சர் தெரிவித்தார். 5 பேருக்கு டெல்டா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவர்களின் மாதிரிகள் பெங்களூருக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் முடிவுகள் தெரிய வரும். ஆகவே தமிழ்நாட்டில் இதுவரை ஓமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்படவில்லை, இருப்பினும், விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை எந்த அரசியல் கட்சிகள் அமைப்புகளாக இருந்தாலும் பின்பற்ற வேண்டும். தற்போது ஓமைக்ரான் தொற்று பரவிவருவதால் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவை இருந்தால் முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் விழுப்புரத்தில் மாஸ்க் இல்லாமல் பேருந்தில் ஏறி மக்களிடம் உரையாடிய சம்பவம் குறித்த கேள்விக்கு, காலையில் ஓட்டப் பயிற்சியில் இருந்ததால் மாஸ்க் அணியவில்லை என்றும், அதனால் அப்படியே பேருந்தில் ஏறி மக்களிடம் பேசியதாகவும் தெரிவித்தார். இந்த செய்தி பத்திரிகையிலும் வந்துள்ளது. இருந்தாலும் மாஸ்க் அணியாமல் கவனக்குறைவாக பேருந்தில் ஏறியது தவறுதான் என்று மா.சுப்பிரமணியன் வருத்தம் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,