ருசி பழகும் வயது எது
ருசி பழகும் வயது எது
பிஸ்கட் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தங்கள் பொருட்களின் விலை குறைவாக இருக்க வேண்டும்; பெரும்பாலான மக்களை எளிதில் சென்றடைய வேண்டும் என்றே விரும்புகின்றனர்.பிஸ்கட், பேக்கரி பொருட்களில் பெரும்பாலும், 'ஹைட்ரோஜெனேடட்' எண்ணெய் உள்ளது
இது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.தொடர்ந்து, இது போன்ற உணவுகளை சாப்பிடும் போது, உடல் பருமன் கூடுவதுடன், தற்போதுள்ள நாகரிக நோய்களான கேன்சரில் துவங்கி, இதய நோய்கள், நீரிழிவு வரை அனைத்து பிரச்னைகளும் வருகிறது.எனவே சமோசா போன்ற நம் நாட்டு உணவாக இருந்தாலும், பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய துரித உணவானாலும், சாப்பிடாமல் இருப்பதே ஆரோக்கியம்; அவரவர் பாரம்பரிய உணவுகளே நல்லது.வீட்டில் தயாரிக்கும் பாரம்பரிய நொறுக்குத் தீனிகளான கடலை மிட்டாய், முறுக்கு, தட்டை, அதிரசம், எள் உருண்டை, அவல், பொரி உருண்டையே நல்லது.இரண்டு வயதிற்குள் என்ன ருசியை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குகிறோமோ, அது தான் பிடிக்கும்.
Comments