Monday, December 13, 2021

*தேநீரே நஞ்சாகலாம்.*தேநீரே நஞ்சாகலாம். விழிப்புணர்வுக் குறிப்பு!* உங்கள் தேநீரின் தரத்தைப் பற்றி உறுதியாகக் கூறுவது மிகவும் கடினம், ஆனால் நீங்கள் செயல்முறையைப் பின்பற்றினால், ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.தேநீர் என்பது நமது அன்றாட வாழ்வில் அனைவரும் அருந்தும் ஒரு பானம். பல்வேறு வித்மாக தேநீர் தயாரிக்கப்படுகிறது.


அதிக அளவு பாலை சேர்த்தும் குடிக்கலாம் (Tea With Milk), பாலே இல்லாத டீ சிலருக்கு விருப்பமானதாக இருக்கிறது. வேறு சிலரோ க்ரீன் டீ நல்லது என்று சொல்கிறார்கள். எந்தவகை தேநீராக இருந்தாலும் சரி, தேநீர் என்பது உலக அளவில் அதிகமாக குடிக்கப்படும் பானங்களில் முக்கியமான ஒன்று.


தேநீர் இல்லாத வாழ்க்கையை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால், தேநீர் என்ற பெயரில் நீங்கள் குடிப்பது பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு ஆம் என்று உடனடியாக பதில் சொல்ல உங்களுக்கு முடியுமா?


ஏனென்றால் தேநீர் பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. தேயிலையில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்களால், இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. வயிற்றில் கடுமையான அமிலத்தன்மையை ஏற்படுத்தும் தேநீர், நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கலாம். புற்றுநோயைக் கூட உண்டாக்கலாம். எனவே, தேநீரை பருகுவதை தவிர்க்க முடியாவிட்டால் கூட, அது பாதுகாப்பானதா என்பதை தெரிந்துக் கொண்டு பருகலாம்.


 


தேயிலையின் தரம் என்பது, தேயிலைகளின் அளவு, நிறம் மற்றும் வாசனையால் தீர்மானிக்கப்படுகிறது. சில நேரங்களில், பறிக்கப்படும் தேயிலையை பயன்பாட்டிற்கானதாக மாற்றும் செயலாக்கத்தின் போது இலைகள் சேதமடைகின்றன.


அதுமட்டுமல்லாமல், சில உற்பத்தியாளர்கள் செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்துகின்றனர். தேயிலைக்கு நிறமூட்டுவதற்கு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (Food Safety and Standards Authority of India) தடைசெய்துள்ளது.

பொதுவாக தேயிலைகளில், பிஸ்மார்க் பிரவுன், பொட்டாசியம் ப்ளூ, மஞ்சள், நீல நிறம் மற்றும் கிராஃபைட் போன்ற ஆபத்தான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.


உங்கள் தேநீர் அடர் கருப்பு நிறத்தில் இருந்தால் (Colour of Tea), கிராஃபைட் (graphite) இருக்கலாம். பென்சிலின் நுனியை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பொருள் இதுவாகும்.


 


இது தவிர, சில நேரங்களில் பயன்படுத்தப்பட்ட தேயிலைகளில் மணம் மற்றும் சாயத்தை பயன்படுத்தி புதிய தேயிலையைப் போல் உருவாக்கி கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தேயிலையின் எடையை அதிகரிக்க மரத்தூள் பயன்படுத்தப்படுகிறது. தோராயமான மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி கிலோகிராம் நல்ல தரமான டார்ஜிலிங் தேயிலை (Darjling Tea) உற்பத்தி செய்யப்படுகிறது, ஆனால் மொத்த விற்பனை அளவு சுமார் 4 கோடி கிலோகிராம் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல் ஆகும்.


தேயிலையின் தரத்தை எவ்வாறு சோதிப்பது


நல்ல தரமான தேயிலை இலைகள் கைகளால் பறிக்கப்படுவதால் அளவு பெரியதாக இருக்க வேண்டும்

தேயிலையை நீருடன் சேர்த்து கொதிக்க வைத்தால், அதன் நிறம் பளபளக்கும் சிவப்பு அல்லது பொன்னிறமாக இருக்க வேண்டும்

சுவையில் கசப்பு இருக்கக் கூடாது.சோதனை செயல்முறை


வடிகட்டி காகிதத்தை (filter paper) எடுத்துக் கொள்ளுங்கள்

அதன் மீது தேயிலையை பரப்பி வைக்கவும்

தேயிலையின் மீது தண்ணீர் தெளிக்கவும்

சிறிது நேரம் கழித்து காகிதத்தில் இருந்து தேநீரை அகற்றவும்

காகிதத்தை தண்ணீரில் கழுவவும்

வடிகட்டி காகிதத்தில் உள்ள புள்ளிகளை உன்னிப்பாக கவனிக்கவும்

தேயிலை தரமானதாக இருந்தால் காகிதத்தில் எந்த மாறுதலும் இருக்காது

கலப்பட தேயிலை காகிதத்தில் பழுப்பு நிற புள்ளிகளை விட்டுவிடும்


எனவே, அடுத்த முறை, தேயிலை வாங்கும்போது மிகவும் விழிப்புடன் இருங்கள்!*பகிர்வு*No comments: