சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமின்று!




 














இந்திய மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலும் ஊழல் மிக அதிகமாக வியாபித்துள்ளதை காணமுடிகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி திட்டங்களை ஊழல் சீரழிப்பதோடு, அந்நாட்டின் நிலையான ஆட்சிக்கும், உள்ளநாட்டு பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக விளங்குகின்ற நிலையை காண முடிகிறது. சர்வதேச அளவில் ஊழலை தடுக்க, ஐ.நா., அமைப்பு, 2003 அக்.,31ல், ஊழலுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்தி, அதை உலக நாடுகளில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றியது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிச.,9 ஐ சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கடைப்பிடித்து, ஊழலின் நச்சுத்தன்மையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென தெரிவித்தது. ஆண்டுக்கு ஒருமுறை ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரித்துவிட்டு, மற்ற நாட்களில் 'மாமூல்' வாழ்க்கையை தொடர்வதால் ஊழல் ஒழிப்பில் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது. சட்டவிதிமுறைக்குப்பட்ட காரியத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விடவேண்டும்.
லஞ்சம் கேட்பவரிடம், 'லஞ்சம் ஏன் கொடுக்கணும்' என கேட்க வேண்டும். ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும். லஞ்சப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, மாநில லஞ்சஒழிப்புத்துறை, மத்திய புலனாய்வு துறைக்குரியது என எண்ணி, தங்களது பங்களிப்பை புறக்கணிக்கக்கூடாது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,