அவதூறு பேர்வழிகளுக்கு எச்சரிக்கை'.. மாரிதாஸ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் ரியாக்ஷன்


இது அவதூறு பேர்வழிகளுக்கு எச்சரிக்கை'.. மாரிதாஸ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் ரியாக்ஷன்




மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ். பா.ஜ.க. ஆதரவாளரான இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.


இதற்கிடையே நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை வைத்து டுவிட்டர் ஒன்றை பதிவிட்ட மாரிதாஸ் காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகூறி இருந்தார்.

மாரிதாஸ் கைது மாரிதாஸ் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்வதாக கூறி மதுரை மாநகரக் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்று மாரிதாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 504 (தனது கருத்தால் அல்லது பதிவால் சமூகத்தில் பிரச்னை ஏற்படும் என தெரிந்தே பதிவிடுதல்), 505 ( ii ) (ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்படுத்தி பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் தூண்டி விடுதல்), 505 ( i ) ( b ) (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மரிதாஸை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு தேனி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருக்கும் மாரிதாஸை வேறு ஒரு வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதாவது கடந்த ஆண்டு நியூஸ்18 தமிழ்நாடு நிர்வாகத்தின் மீது தான் பல்வேறு புகார்களை வைத்ததாகவும், இதனை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டு, மூத்த ஆசிரியர் வினய் சரவாகி அனுப்பியதாக மெயில் ஒன்றை அனுப்பியதாகவும் மாரிதாஸ் டுவிட் போட்டு இருந்தார்.

தான் அப்படியொரு இமெயிலை மாரிதாஸுக்கு அனுப்பவில்லை என்றும், அவர் போர்ஜரி செய்து மோசடியாக மெயில் ஒன்றை வெளியிட்டதாகவும் சென்னை மாநகர குற்றப்பிரிவில் பத்திரிகையாளர் வினய் சரவாகி புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மாரிதாசை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- செய்தி ஊடகங்களின் செயல்பாட்டுக்கு உள்நோக்கம் கற்பித்தும், ஊடகவியலாளர்களை நேர்மையான வகையில் தங்கள் பணிகளைச் செய்யவிடாமல் அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்த மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் என்பவரை, நியூஸ்18 தொலைக்காட்சி நிர்வாகத்தின் சார்பில் மூத்த பத்திரிகையாளர் திரு. வினய் சரவாஹி அளித்த மோசடி புகாரில் கைது செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வரவேற்கிறோம்.


எச்சரிக்கையாக அமையும் ஊடக செயல்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கொச்சைப்படுத்தும் வகையிலும் தான்தோன்றித் தனமாக அவதூறான வகையில் பேசியும் செயல்பட்டும் வந்த மாரிதாஸின் செயல்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் அப்போதே கண்டனம் செய்திருந்தது. சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவர் மீது எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவு கூர்கிறோம். தாமதமானாலும் தற்போதைய இந்த நடவடிக்கை போலியான அவதூறு பேர்வழிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என்று நம்புகிறோம்

news courtesy:https://tamil.oneindia.com/n

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி