தவறாக அப்டேட் ஆன ஸ்டேட்டஸை உடனே நீக்கலாம்!
WhatsApp இல் வரப்போகும் சூப்பர் அப்டேட் – தவறாக அப்டேட் ஆன ஸ்டேட்டஸை உடனே நீக்கலாம்!
வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது வாடிக்கையாளர் தற்போது புதிய அம்சத்தை பயன்படுத்தி பயனடைந்து கொள்ளும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட் யாருக்கெல்லாம் கிடைக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் அப்டேட்:
வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் பயன்பாட்டுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுவதும் உள்ள பல கோடி பயனர்களும் பயனடைந்து வருகின்றனர். இதனால் மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பல விஷயங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஐஓஎஸ் பயனர்களுக்கான புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து நிறுவனம் தனது அதிகாரபூர்வ் தலத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பயந்தனர் தங்கள் வைத்த ஸ்டேட்டஸை உடனடியாக நீக்குவதற்கு ஒரு புதிய அமைப்பை கொண்டு வந்துள்ளது. தற்போது, போஸ்ட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸை அகற்ற, பயனர்கள் முதலில் மூன்று-புள்ளி மெனுவை க்ளிக் செய்து, பின் வரும் விருப்பங்களில் நீக்கு என்பதை அழுத்த வேண்டும். இந்த முறையில் குறைந்தது சில வினாடிகளாவது பயனர்கள் செலவிட நேரிடும்.
அதனால், வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு அடுத்துள்ள செயல்தவிர் பட்டனை கிளிக் செய்வதன் மூலம், போஸ்ட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸை விரைவாக நீக்க முடியும். இந்த புதிய வசதி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில iOS சோதனையாளர்களுக்கு மட்டுமே வழங்ப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் அமைப்பில் இந்த வசதி எப்போது கிடைக்கும் என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால், புதிய அப்டேட்கள் விரைவில் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments