வைட்டமின்-D மாத்திரைகள் அதிகமாக சாப்பிட்டால்

 வைட்டமின்-D மாத்திரைகள் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்.
உடலின் ஆரோக்கியத்தை சீராக வைக்க வைட்டமின்கள் மிக முக்கியமானவை. குறிப்பாக நமது உடலை எந்த நோய் கிருமிகளும் தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி உறுதியாக இருக்க வேண்டும்.அந்த வகையில் எதிர்ப்பு சக்தியை சிறப்பான முறையில் வைக்க வைட்டமின் டி மிக அவசியம். வைட்டமின் டி குறைவாக இருந்தால் எலும்புகளில் பாதிப்பு, உடல் பலவீனமாகுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும்.


இந்த குறைபாட்டை குணப்படுத்த வைட்டமின் டி மாத்திரைகளை சாப்பிட சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் இந்த மாத்திரைகளால் நன்மை கிடைக்கிறது என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மோசமான பாதிப்புகள் உடலில் ஏற்படும். அவை என்னென்ன என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.


வைட்டமின் டி அளவு:


உடலுக்கு 30-60 ng/mL அளவு வைட்டமின் டி தேவைப்படுகிறது. சிலர் இந்த அளவை விடவும் அதிகமாக சாப்பிடுவதால் எதிர்பாராத பல பிரச்சனைகள் உடலுக்கு உண்டாகுகிறது. 100ng/mL அளவுக்கும் அதிகமாக வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்து கொண்டால் அது விஷ தன்மையாகவே மாறி விடும். எனவே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை நீங்களாகவே எடுத்துக்  கொள்ளக் கூடாது.கால்சியம் அளவு:


உணவில் உள்ள கால்சியம் சத்தை உடலுக்கு எடுத்துக்கொள்வதில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அதிக அளவில் வைட்டமின் டி உட்கொண்டால் இரத்தத்தில் கால்சியம் அளவு சீராக இருக்காது. 8.5 முதல் 10.8 mg/dL வரை உடலில் கால்சியம் அளவு இருக்க வேண்டும். இதற்கு அதிகமாக சென்றால் வாந்தி, மயக்கம், மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். மேலும் சிலருக்கு தலை சுற்றல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசியின்மை, சிறுநீரகத்தில் கல் உருவாதல், அதிக இரத்த அழுத்தம், நீர்சத்து குறைபாடு மற்றும் இதயம் சார்ந்த சில பாதிப்புகளும் ஏற்படும்.


மனநிலை மாற்றம்:


அதிக அளவில் வைட்டமின் டி எடுத்து கொள்வதால் உடலில் கால்சியம் அளவில் மாற்றம் ஏற்பட்டு 'ஹைப்பர் கால்சிமியா' என்கிற பாதிப்பு ஏற்படும். இதனால் உங்கள் மனநிலையை நேரடியாக பாதிக்கும். மேலும் எப்போதும் குழப்பமாக இருத்தல், மன அழுத்தம், சைக்கோத்தனம் போன்ற பிரச்சனைகளும் கூடவே உருவாகும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.சிறுநீரக பாதிப்பு:


வைட்டமின் டி உடலில் அதிகமாக சேர்வதால் சிறுநீரத்திற்கு நேரடி பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உண்டாகும் கால்சியம் அளவின் மாறுபட்டால் சிறுநீரகம் முற்றிலுமாக செயலிழக்கவும் வாய்ப்புள்ளது. இந்த நிலையை அடிக்கடி சிறுநீர் கழிக்கும் அறிகுறியின் மூலம் கண்டறியலாம்.


குடல் பிரச்சனைகள்:


உடலில் அதிக படியாக எடுத்து கொள்ளும் வைட்டமின் டி-யினால் கால்சியம் அளவில் மாறுதல் ஏற்பட்டு வாந்தி, மயக்கம், பசியின்மை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற குடல் சார்ந்த பிரச்சனைகள் உருவாகும். இந்த அறிகுறிகள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்க கூடும். எனவே எந்த நிலையிலும் வைட்டமின் டி மாத்திரைகளை அதிக அளவில் எடுத்து கொள்ளாதீர்கள்.


பகிர்வு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,