வெறும் 10 நிமிடத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெந்தயக்கீரை சப்பாத்தி

 வெறும் 10 நிமிடத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெந்தயக்கீரை சப்பாத்தி




உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியை மிக மிக சுலபமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு சூப்பரான ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இந்த வெந்தயக்கீரை சப்பாத்தியை மேத்தி சப்பாத்தி என்றும் சொல்லுவார்கள். ஆரோக்கியம் தரக்கூடிய வெந்தயக் கீரையை கடைந்து கொடுத்தால், குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி சப்பாத்தியாக செய்து லஞ்சுக்கு பாக்ஸில் போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தால் இரண்டு நாட்களுக்கு கூட இந்த சப்பாத்தியை எடுத்து வைத்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிரில் காராபூந்தி சேர்த்து பச்சடி இருந்தாலும் போதும்.


ஒரு அகலமான பவுலில் 1 கப் அளவு கோதுமை மாவை எடுத்துக்கொள்ளுங்கள். 200 லிருந்து 250 கிராம் அளவு கோதுமை மாவு. கடலை மாவு அல்லது பொட்டு கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை – 1/2 கப், சீரகம் – 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மிளகாய்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, 1 – டேபிள்ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் இந்த எல்லா பொருட்களையும் உங்கள் கை கொண்டு முதலில் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.


அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிர் தெளித்து மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவை ரொம்பவும் கெட்டியாக பிசைந்து விடக் கூடாது. மாவு சாஃப்டாக இருந்தால்தான், சப்பாத்தி நமக்கு மிருதுவாக கிடைக்கும். 1 கப் கோதுமை மாவுக்கு, 3/4 கப் அளவு தண்ணீர் சரியானதாக இருக்கும்.


பிசைந்த இந்த மாவின் மேலே கொஞ்சமாக எண்ணெய் தடவி, ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்துவிடுங்கள். அதன் பின்பு இந்த மாவை உங்களுக்கு தேவையான அளவு உருண்டைகளாக செய்து, சப்பாத்தி கல்லில் எப்போதும்போல மெல்லிசாக சப்பாத்தியை திரட்டி, தேவைப்பட்டால் முக்கோண வடிவத்தில் மடித்து திரட்டி, தோசைக்கல்லில் எப்போதும் போல சப்பாத்தியை சுட்டு எடுக்க வேண்டியதுதான்.


உங்கள் விருப்பம் போல நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டு எடுத்து நன்றாக ஆற வைத்து மடித்து ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து எடுத்து லஞ்ச்சுக்கும் கொடுத்து அனுப்பலாம். நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தால் இந்த சப்பாத்தியை அப்படியே எடுத்தும் செல்லலாம். இரண்டு நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. தேவைப்பட்டால் சுடசுட வீட்டிலேயே சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

பின்குறிப்பு: வெந்தயக் கீரைக்கு பதிலாக பசலைக்கீரை கொத்தமல்லி தழை சேர்த்து இந்த சப்பாத்தியை செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். செய்த உடனேயே இந்த சப்பாத்தியை சாப்பிட்டு விடுவதாக இருந்தால் 2 ஸ்பூன் தயிர் சேர்த்தும், இந்த சப்பாத்தி மாவை பிசைந்து கொள்ளலாம். இன்னும் சுவை அதிகரிக்கும்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,