மாட்டுப் பொங்கல்" செய்தி

 20ம் நூற்றாண்டு கடந்து, 21ம் நூற்றாண்டிலும் *"தாய்ப்பால்"* குடித்து வளர்ந்தவர்களை விட *"மாட்டுப் பால்"* குடித்து வளர்ந்தவர்களும், வாழ்ந்தவர்களுமே அதிகம் என்றால் அது மிகையல்ல.



அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை தங்களின் உதிரத்தில் இருந்து உற்பத்தி செய்து வழங்கும் *"பசுக்களுக்கும், எருமைகளுக்கும்",* உணவு உற்பத்தியில் விவசாய பெருமக்களுக்கு உற்ற துணையாக இருந்து, உழைப்பிற்கு உதாரணமாக திகழும் *"எருதுகளுக்கும் நன்றி"*


கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் *"மாட்டுப் பொங்கல்"* திருநாளாம் இந்நன்னாளில் பால் உற்பத்தி, விநியோகம், விற்பனையில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள், பால் நிறுவனங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள், அதன் உரிமையாளர்கள் மற்றும் கால்நடைகள் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் *"தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்"* சார்பிலும், *"மக்கள் நீதி மய்யம்"* தொழிலாளர் நல அணி, *"நம்மவர் தொழிற்சங்க பேரவை"* சார்பில் *"இனிய மாட்டுப் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்".* தெரிவித்துக் கொள்ளும் இனிய வேளையில் *நாட்டு மாடுகளை காத்திடவும்,* தேசத்தின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வளர்த்திடவும் *உறுதியேற்போம்.*


*பின் குறிப்பு :-* கடந்த 2016ம் ஆண்டு மாட்டுப் பொங்கல் திருநாளன்று *அகில இந்திய வானொலியின் "சிறப்பு தேன்கிண்ணம்"* நேரலை நிகழ்ச்சியில் *சிறப்பு விருந்தினராக நான்* கலந்து கொண்ட நிகழ்வின் குரல் பதிவை 2008ம் ஆண்டு முதல் 2016வரை பால் முகவர்கள் சங்கம் தொடர்பான *புகைப்பட தொகுப்புகளோடு காணொளியாக பதிவு* செய்யப்பட்டள்ளது. இந்நிகழ்ச்சி தொகுப்பை *பாரு(கேளு)ங்க.!,* உங்கள் கருத்துக்களை *பகிருங்க..!!* மறவாமல் *Subscribe பண்ணுங்க...!!!*


நன்றி



*சு.ஆ.பொன்னுசாமி*



https://youtu.be/Il6vnJkzRqk

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,