கருமாண்டி ஜங்ஷன் நடத்திய சிறுகதை போட்டி
அமிர்தம் சூர்யாவின் கருமாண்டி ஜங்ஷன் மூலம் நடத்திய வெங்கட்சாமிநாதன் நினைவு சிறுகதைப் போட்டிக்கு 241 சிறுகதைகள் வந்தது.
கல்கியில் அ வர் பணிபுரிந்த கடந்த 13வருடங்களாக கல்கி சிறுகதைப் போட்டி தேர்வில் விரும்பி உழன்று வந்த அவருக்கு எது பரிசுக்குரியது எது தேர்வுக்கு உரியது என்று அறியாமல் இருக்க வாய்ப்பில்லை
.ஆயினும் சிலர் விளையாட்டாக அவரின் தோழிகளுக்கு தான் உன் நண்பர்களுக்கு தான் பரிசா என்று கேட்டனர். அது நையாண்டியாக இருந்தாலும் அதில் அவநம்பிக்கையின் இழையோடியது
.எனவே தான் மூன்று நடுவர்களாக அவரின் முன்னோடி சீனியர்கள் திரு. சுப்ர.பாலன் ,திரு ரிஷபன், திரு கணேஷ்பாலா ஆகியோரை செயல்படவைத்தார்.
அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடும் அறத்தோடும் மதிப்பெண் போட்டு தேர்வு செய்து 30 கதைகளை தந்தனர்.
அதில் 13 கதைகளை அமிர்தம் சூர்ய தேர்வு செய்தார். (அதில் இறுதி தேர்வுக்கு வந்த ஒரே ஒரு பெண்மணி நிம்மி சிவா மட்டுமே)
இந்த 13 கதைகளையும் அவரின்
நம்பிக்கைக்குரிய இரு நண்பர்களிடம் வாசிக்க தந்து கலந்துரையாடி
அதிலிருந்து 3 கதைகளை முதல் மூன்று பரிசுக்குரியதாகஅறிவித்துள்ளார்
.இந்த மதிப்பீட்டின் அளவுகோல் என்பது வெங்கடசாமிநாதன் போல்அவரின் ரசனைசார்ந்தது என்பது குறிப்பிடதக்கது
மற்ற 10 கதைகள் சிறந்த கதைகளாக ரூபாய் 1000 பரிசாக பெறுகிறது. இந்த 13 கதைகளும் நூலாக விரைவில் அச்சிட்ட தயாராக இருக்கிறது தேநீர் பதிப்பகம். அதற்கு விழாவும் இருக்கிறது –
பரிசு தொகைக்கு பொறுப்பேற்ற நாவலாசிரியர் நாராயணி கண்ணகி , நாவலாசிரியர் சீனிவாசன் நடராஜன் ஆகியோர்க்கும் ..மற்றும் பக்கபலமாக நின்று நூலாக்கும் முயற்சியில் இருக்கும் நா. கோகிலன், மற்றும் கவிஞன் வீரமணி ஆகியோர்க்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்அமிர்தம் சூர்யா
-
Comments
இலக்கிய உலகில் அரிதாகவே இருக்கின்றார்கள்
இவரைப்போன்றவர்களின் சிறப்பான முன்னெடுப்புகளில்
மகிழ்வோடும் உள்ளன்போடும் இணைந்து நிற்பதை
பெருமையாக உணர்கிறேன்
நல்ல படைப்பாளிகளின் மீது வெளிச்சம்பாய்ச்சும்
people today குழுவினருக்கு வாழ்த்துகள் !
இலக்கிய உலகில் அரிதாகவே இருக்கின்றார்கள்
இவரைப்போன்றவர்களின் சிறப்பான முன்னெடுப்புகளில்
மகிழ்வோடும் உள்ளன்போடும் இணைந்து நிற்பதை
பெருமையாக உணர்கிறேன்
நல்ல படைப்பாளிகளின் மீது வெளிச்சம்பாய்ச்சும்
people today குழுவினருக்கு வாழ்த்துகள் !