25 நாட்களைக் கடந்தும் வசூலை அள்ளும் புஷ்பா
புஷ்பா படம் 25 நாட்களைக் கடந்தும் வசூல் அள்லுது
செம்மரக் கடத்தலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லன் கதாப்பாத்திரத்தில் மலையாள நடிகர் ஃபகத் பாசில் ஆகியோர் நடிச்சிருக்காங்க. மேலும் இப்படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலுக்கு முன்னணி நடிகையான சமந்தா நடனமாடியிருந்தார்.
இந்தப் பாடல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய போதும் செம ஹிட்டானது. உலக அளவில் 100 மில்லியன்களுக்கு மேல் வியூஸ்களை குவிச்சுக்க்டி இருக்குது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சினிமா பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் மற்றும் குஷ்பு ஆகியோர் புஷ்பா படத்தை பார்த்துவிட்டு பாராட்டி தள்ளியுள்ளார். இதுதொடர்பாக அவிய்ங்க பதிவிட்டுள்ள டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, "புஷ்பா தி ரைஸ்.. வாவ்.. என்ன ஒரு எண்டெர்டெய்னர்... பறந்துவிட்டேன்.. சுகுமாருக்கு பாராட்டுக்கள்.. அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பாக செய்துள்ளார்கள்.. டிஎஸ்பியின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் அடிமையாகிவிட்டேன். அல்லு அர்ஜூன் என்ன பர்ஃபாமர்ன்ஸ்! பாடி லாங்குவேஜ் மற்றும் மனதை கவரும் நடிப்பு.. சின்ன சின்ன நுணுக்கங்களையும் ரசித்தேன்.. ஹேட்ஸ் ஆஃப் ’அப்ப்டின்னெலாம் சொல்லி இருந்த புஷ்பா படம் 25 நாட்களைக் கடந்தும் வசூல் ரீதியாவும் நல்லா ஓடிகிட்டு இருக்குதாம்
by
கட்டிங் கண்ணையா
Comments