தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு 90 நாட்களில் பூஸ்டர் தடுப்பூசி..

 தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு 90 நாட்களில் பூஸ்டர் தடுப்பூசி... அறிவித்தது சுகாதாரத்துறை!!




கொரோனா பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய 90 நாட்களிலேயே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


கொரோனா பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய 90 நாட்களிலேயே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை முதல் வருகின்ற 4 ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் நடைபெற உள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.



அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. தேர்தலை நடத்துவது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில், தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு 90 நாட்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பின் 9 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும்  என சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய 90 நாட்களிலேயே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் ஈடுபடும் பணியாளர்கள், கோவின் செயலியில் முன்களப்பணியாளர்கள் வரிசையில் சேர்க்கப்படுவார்கள். பூஸ்டர் தடுப்பூசி போடுபவர்கள் ஆதார் எண் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதனை தேர்தல் அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,