தீர்க்கமாய் அருளும் திண்டல்மலை முருகன்.

 தீர்க்கமாய் அருளும் திண்டல்மலை முருகன்.


எந்தாயும் எனக்கருள் தந்தையுமாய் குன்றுதோராடும் குமரன் குடிகொண்டு குறைவிலாதருளும் கொங்குநாட்டுத்திருத்தலம் திண்டல்மலை.ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்துரம்யமாய் காணப்படுகிறது.அருணகிரிநாதரால்பாடல் பெற்ற178தலங்களில்,திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும்ஒன்று.இவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கு ஒரு சிறப்பு உள்ளது. பூந்துறை நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட போது வேளாளர்கள் ஒன்று கூடி இடும்பக்குமரனை வேண்டி அவர் மூலம் நாட்டில் மழை பெய்ய வேண்டிக் கொண்டனர். வேண்டுதலுக்கு பின் மழை பெய்து வளம் ஏற்பட்டது என்ற வரலாறு உண்டு. இங்குள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளை பெற்று வருவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.தீபஸ்தம்பம்இதில் கார்த்திகை தீபத்தன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபஸ்தம்பத்தின் நான்கு புறத்திலும் சமய தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.திருவிழா : மாதம்தோறும் கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகியநாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப்புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாககொண்டாடுகின்றனர். சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயகசதுர்த்தி,நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது. சிறப்பு : கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.திறக்கும் நேரம் :காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும் பிரார்த்தனை :செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திண்டல் வேலாயுதசாமி கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை முருகனின் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இதனால் எண்ணிய எண்ணங்களை எண்ணியபடியே வேலாயுதசாமி நிறைவேற்றுகிறார்.புதிய வாகனங்கள் வாங்குவோர் திண்டல் மலைக்கு சென்று வேலாயுதசாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்கின்றனர்.மயில் வாகனம்.
🌹 🌿தல சிறப்பு :நெடுஞ்சாலையின் தொடக்கத்தில் அழகிய நுழைவாயிலும், ஓங்கி உயர்ந்த வளைவின் முகப்பில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, மயில்வாகனம், சிவன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் பக்தர்களை வரவேற்கின்றனர். முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். மெய்யறிவிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபட்டு செல்லும் பக்தர்களின் குறைகள் தீர்கிறது.அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்மண்டப முகப்பில் வேலாயுதசாமி சிலை அமையப்பெற்றுள்ளது. அங்கிருந்து தொடங்கும் படிகளை கடந்தால் இடும்பன் கோயிலை அடையலாம்.காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வேலாயுதசாமி கருவறையில் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை போக்குகிறார்.மூலவர் வேலாயுத சுவாமிமலைமகள் மகனாக, மாற்றார் கூற்றாக வேல் தாங்கி வேலாயுதசாமி உள்ளார். தீராவினை தீர்க்கும் வேலுடன் காட்சி தரும் திண்டல்மலை முருகனை வழிபடுவோர் எல்லாம் தெளிவடைகின்றனர்.கருவறையின் வடமேற்கு பகுதி மலைச்சரிவில் சற்று தாழ்வான பகுதியில் தன்னாசி குகை உள்ளது. இதில் சமய பெரியார்களான சன்னியாசிகள் வாழ்ந்த சிறப்பு பெற்றது. இந்த தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மலையின் வடகிழக்கு பகுதியில் உள்ள அழகியஇயற்கைச்சுனையில் வற்றா நீரூற்று ஆண்டவனின் அபிஷேகத்திற்கும், பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது.கோயில் தீர்த்தம்இத்தலத்திற்கு அருகில் கருப்பணசாமி கோயில்கள் ஐந்து உள்ளது. கருப்பணசாமி வைணவத் தாக்கம் உள்ள தெய்வ வழிபாடாகும். மாரியம்மன் கோயில்கள் மூன்று இங்குள்ளது. அவை சக்தி வழிபாட்டின் பெருமையைவிளக்குவதாக உள்ளது.ஈரோடு நகரின் வளத்திறகும், செழிப்பிற்கும் தீர்க்கமாய் திண்டல் முருகன் அருட் கண்பார்வையில் இந்நகரம் சிறப்பு வாய்ந்தன. ஒரு நாளைக்கு மூன்றுகால பூஜைகள்நடக்கிறது. காலை 7 மணிக்கு காலை சந்தி பூஜையும், 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடக்கிறது. காலை 6 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணியளவில் அபிஷேக ஆராதனை நடக்கிறது. ஓம் சரவணபவ🙏



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,