மன்சூர் அலிகான்

 


மன்சூர் அலிகான் எப்போதுமே ஒரு சிறந்த நடிகன் என பெருமிதம் கொள்ளும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அவர் தனது முதல் படத்தில் செய்த சுவாரஸ்யங்களைபகிர்ந்துள்ளார். மன்சூர் அலிகான் முதல் படமான கேப்டன் பிரபாகரனில் நடித்த கதாபாத்திரமான வீரபத்திரன் , சந்தனக்கடத்தல் வீரப்பனின் சாயலை கொண்டு உருவாக்கப்பட்டது. படத்தில் மன்சூர் அலிகான் காதில் ஒரு கடுக்கன் ஒன்றை அணிந்திருப்பார். அது ஷூட்டிங் சமயத்தில் கீழே விழுந்துவிட்டதாம் . உடனே காஸ்டியூம் அசிஸ்டண்ட் கடுக்கன் கீழே விழுந்துவிட்டது எங்கே என பார் என்றாராம். அதற்கு மன்சூர் அலிகான் “ நீயே பாருடா...” என திமிராக கூறியிருக்கிறார். பளார் என அறைவிட்டதாக கூறிய செல்வமணி, மன்சூர் அலிகான் தன்னிடம் வந்து ‘அண்ணே ...வீரப்பன்கிட்ட எப்படி பேசனும்னு சொல்லிக்கொடுங்கண்ணே “ என்றாராம். இதன் மூலம் கொடுக்கும் கதாபாத்திரமாகவே மன்சூர் அலிகான் மாறிவிடுவார் என்கிறார் செல்வமணி.

இதே போலதான் குதிரை சவாரி ஒன்றை செய்ய வேண்டியிருந்ததாம். இது குறித்து மன்சூர் அலிகானிடம் . “உனக்கு குதிரை ஓட்ட தெரியுமாடா ?” என கேட்டாராம் செல்வமணி. அதற்கு மன்சூரும் “ம்ம்ம்ம் பண்ணிடலாம்ணே ..” என்றாராம். உடனே தமிழ் சினிமாவில் பிரபலமான குதிரை ஒன்றை அழைத்து வந்தார்களாம் . குதிரை உரிமையாளர் எப்படி குதிரை ஓடுவது என சில டிப்ஸுகளை சொல்லியிருக்கிறார். அப்போது ஃபிலிமில்தான் படம் எடுக்க வேண்டும் என்பதால் கொடுக்கப்பட்ட ஃபிலிம்ஸுக்கு காட்சியை எடுத்தாக வேண்டும். 74 ஃபிரேமில் எடுக்க வேண்டிய காட்சி என்பதால் மிகுந்த வேகமாவும் நேர்த்தியாகவும் குதிரையை கையாள வேண்டும் என கூறியிருக்கிறார் செல்வமணி..லைட்...கேமரா..ஆக்‌ஷன் என்றதும், குதிரை ஒரே இடத்திலேயே இருந்திருக்கிறது. உடனே செல்வமணி என்ன ஆச்சு என கேட்டாராம். அதற்கு மன்சூர் அலிகான் “குதிரை வரமாட்டிங்குது அண்ணே..” என்றாராம். அதன் பிறகு இரண்டு மூன்று டேக்குகளுக்கு பிறகு குதிரை பயிற்சியாளரை அழைத்து பார்க்க சொன்னாராம் செல்வமணி. அப்போதுதான் மன்சூர் குதிரையை இறுக்கமாக பிடித்திருப்பது தெரிந்திருக்கிறது. உடனே அவரை திட்டியிருக்கிறார் செல்வமணி. இதனால் கோவமான மன்சூர் குதிரையை சரமாரியாக அடித்துவிட்டாராம். குதிரை பின்னர் அத்துமீரி ஓட ஆரமிக்க , கேமராவை தாண்டி குத்தித்ததும். மன்சூர் அலிகான் தனியாக பறந்து வந்திருக்கிறார். அதன் பிறகு பேக் செய்துவிட்டு , வீரப்பன் கதாபாத்திரத்திற்கு வேறு ஆளை மாற்றலாம் என முடிவெடுத்துவிட்டாராம் மன்சூர். பின்னர் இரவு முழுவதும் பயிற்சி எடுத்து, அடுத்த நாள் ஒரே ஒரு முறை, நான் ஓட்டிக்காட்டுகிறேன் , அதன் பிறகு முடிவெடுங்கள் என்றாராம் மன்சூர் அலிகான். அதன் பிறகு அற்புதமாக குதிரை ஓட்டினார் , அவர் ஒரு விடாமுயற்சி கொண்ட கலைஞன் என பெருமிதம் கொள்கிறார் செல்வமணி.
நன்றி: ABP Nadu

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி