எனக்கு பிடிக்கல தான்./ஸ்ரீநி

 

ஆமா,

னக்கு பிடிக்கல தான்.

நீ யாரிடமாவது பேசினாலே,

நீ யாரிடமாவது பழகினாலே,

நீ யாரையாவது கொண்டாடினாலே,

பிடிக்கல தான்.

கடுப்பு கூந்தலா தான் ஆவுது.

அப்படியே உன் தலையை பிடிச்சு சுவத்துல நாலு தட்டு தட்டனும்னு துடிக்குது தான்.

என்ன செய்ய...

முடிய மாட்டுதே.. 


நான் ஒண்ணும் உலக மகா யோக்கியரெல்லாம் சொல்லிக்க விரும்பல.

முற்போக்கு தனம் எல்லாம் பேசல.

இதுக்கு பேர் நீ பொசசீவ், மெட்சூரிட்டி இல்ல, வளரனும் இன்னும் , பைத்தியகாரதனம், கொஞ்சம் படிச்சவ போல பிஹேவ் பண்ணு, திமிர் பிடிச்சவ னு எந்த பேர் வச்சு கூப்பிட்டாலும் எனக்கு கவலையில்லை.

எனக்கு உள்ள அரிக்குது இந்த விஷயம்.

நெருப்பு துண்டுல பாதம் வைச்சு நிக்கற‌ மாதிரி ஒரு உணர்வு. 


இதெல்லாம் மறைமுகமா பேசியும் புரியமாட்டுது உனக்கு.

நேரடியாக பேசினாலும் திருத்திக்கமாட்டற.

கொஞ்சினாலும் கெஞ்சினாலும் சண்டை போட்டாலும் ஏன் பேசாம இருந்தாலும் மாத்திக்க முடியல உன்னால.. 


எதிர்பார்ப்பில்லா அன்புல எதிர்பார்ப்பு எவ்வளவு முக்கியம் தெரியுமா?

எனக்குனு இருக்கிற அந்த உணர்வு எவ்வளவு முக்கியம் தெரியுமா?

ஆகாயத்துல பறந்துட்டு இருக்கிற மாதிரி இருக்கும் தெரியுமா?

அதெல்லாம் உனக்கு புரியுமா?

அட்லீஸ்ட் புரிஞ்சிக்க ட்ரை பண்ணி இருக்கீயா? 


சண்டை போடறது மட்டும் தெரியும்.

கத்தறது மட்டும் தெரியும்.

கோச்சுக்கறது மட்டும் தெரியும்.

அது ஏன் நடக்குது னு தெரிஞ்சா தான் உங்களுக்கெல்லாம் உலகம் அழிஞ்சு போயிடுமே.‌...


காதலுடன்

#ஸ்ரீநி
Comments

Unknown said…
Wow வாழ்வியலின் அர்த்தம் இந்த எழுத்துகள் ❣️❣️

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,