போன் பண்ணுனா போதும்..' வீட்டுக்கே வந்து தடுப்பூசி போடுவோ

 

போன் பண்ணுனா போதும்..' வீட்டுக்கே வந்து தடுப்பூசி போடுவோம்.. சென்னை மாநகராட்சியின் சூப்பர் திட்டம்கொரோனா வேக்சின் பணிகளை மேலும் துரிதமாக மேற்கொள்ளச் சென்னை மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களும் 1இலட்சத்தை தொட்டுள்ளது.
குறிப்பாகச் சென்னையில் வைரஸ் பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இன்று ஒரே நாளில் சென்னை8ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

வேக்சின் பணிகள் தற்போதைய சூழலில் வேக்சின் பணிகள் மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் வேக்சின் பணிகளை மேலும் துரிதமாக மேற்கொள்ளச் சென்னை மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. அதாவது 60 வயதைத் தாண்டியவர்கள் ஃபோன் செய்தால் நேரடியாகச் சென்று பூஸ்டர் வேக்சின் போடும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின்படி, அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி விலையில்லாமல் விரைந்து செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (10.012022) சென்னையில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களைக் கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்தும் பணியினை தொடங்கி வைத்தார்.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களைக் கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை (Precautionary Booster Dose) நேரடியாகச் சென்று செலுத்திக் கொள்ளலாம். இந்த தடுப்பூசி மையங்களின் விவரங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொண்டு தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக் சென்று முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dosc) செலுத்திக்கொள்ளலாம்
கட்டாயம் அவ்வாறு செல்லும் பொழுது, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது மாநகராட்சி தடுப்பூசி முகாம்களில் மருத்துவரால் வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டை மற்றும் ஆதார் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை உடன் கொண்டு செல்ல வேண்டும். முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை (Precautionary Booster Dose) செலுத்திக் கொள்ள இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் கடந்த நபர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
போன் செய்தால் போதும் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dosc) செலுத்த மாநகராட்சியின் சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் 1913, 044-2538 4520 மற்றும் 044-4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்தால், அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும். மேலும், 50 வயதைக் கடந்த முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியைச் செலுத்த வேண்டிய நாட்களைக் கடந்த நபர்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் அவர்களுக்கும் இல்லங்களிலேயே கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும்" எனப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,