காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்.
காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்.
காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். காலை உணவின் மூலம் தான் அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
அதற்காக காலையில் வெறும் வயிற்றில் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது.
ஏனெனில் இது சில சமயங்களில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
அந்தவகையில் தற்போது காலையில் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட கூடாது என்பதை பார்ப்போம்.
காஃபி , டீ குடிப்பது இரப்பையில் அலர்ஜியை உண்டாக்குமாம். செரிமாணத்தை பாதிக்கும்.
காரமான உணவுகளும் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும்.
புளிப்பான பழங்களில் அமிலத் தன்மை அதிகமாக இருக்கும்.
காலையிலேயே இனிப்பாக சாப்பிடுவது இன்சுலின் அளவை அதிகரிக்கும். இதனால் நீரிழவு நோய் உருவாகலாம்.
தக்காளியில் டேனிக் அமிலம் உள்ளது. இது வயிற்றில் அமிலத்தை அதிகரிக்கச் செய்யும்.
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் இரத்ததில் மெக்னீசியம் அளவு அதிகரிக்கும்.
பிரெட், பன் போன்றவற்றில் இருக்கும் ஈஸ்ட் வயிற்று மந்தத்தை உண்டாக்கும்.
தயிரை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வயிற்றில் சுரந்துள்ள அமிலம் கொன்றுவிடும்.
கேஸ் நிறைந்த, அதிகம் சர்க்கரைக் கொண்ட குளிர்பானங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிறுங்கள்.
தானியங்களை அப்படியே சாப்பிடாமல் முளைக்கட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது தான் நல்லது.
பகிர்வு
Comments