இன்று வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
இன்று வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பிழைக்கச் சென்ற இந்தியர்கள் காலப்போக்கில் அங்கேயே குடியுரிமை வாங்கி வாழ்வது அதிகமாகி விட்டது. அப்படி அங்கு வாழும் இந்தியர்களின் உறவை அப்படியே துண்டித்து விட முடியாது; அவர்களையும் நாம் இணைக்க வேண்டும் என முடிவு செய்த அன்றைய பிரதமர் வாஜ்பாய் 2003ல் ஜனவரி 9ம் தேதியை வெளிநாடு வாழ் இந்தியர் தினம் என அறிவித்தார். அதற்குபிறகு ஆண்டுதோறும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
அதிலும் நம் தேசப்பிதாவான மகாத்மா காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து, 1915ம் ஆண்டு, ஜனவரி 9ம் தேதி இந்தியா வந்தார். இந்த நாளைத்தான் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு வாழ் இந்தியர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. மேலும், மாநாடும் நடைபெறும். கல்வி, தகவல் தொழில்நுட்படம், தொழில்துறை உட்பட பல துறைகளில் சிறந்த விளங்கும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர், விழாவில் கவுரவிக்கப்படுவார். மாநாட்டின்போது, இந்தியாவின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொழில்துறை தொடர்பான விஷயங்கள் ஆராயப்படும்.
Comments