கவிஞர் காமகோடியான் காலமானார்

 கவிஞர் காமகோடியான் காலமானார்.. எம்.எஸ்.வி. முதல் யுவன் வரை 3 தலைமுறைகளுக்கு பாட்டெழுதியவர்..

உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் காமகோடியன், இன்று காலமானார். அவருக்கு வயது 76.
தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான காமகோடியன் இன்று காலமானார். தமிழ் திரையுலகில் 1980களில் பிரபலமாக இருந்த பல சூப்பர் ஹிட் பாடல்கள் கவிஞர் காமகோடியன் எழுதியது தான்.
இவர் எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதி புகழ்பெற்றார். குறிப்பாக கடந்த 2002 ல் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில், இவர் எழுதி வெளியான ‘௭ன் அன்பே ௭ன் அன்பே பாடல்’ இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவர் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திருட்டு ரயில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதினார். அதன்பின் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த காமகோடியன், இன்று காலமானார். அவருக்கு வயது 76.
கவிஞர் காமகோடியனின் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நன்றி: ஏசியன் நெட் நியூஸ்
May be an image of 1 person

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,