மாடித்தோட்டம் அமைக்க இலவச பயிற்சி, உபகரணங்கள் வேண்டுமா? இங்க போங்க!'
மாடித்தோட்டம் அமைக்க இலவச பயிற்சி, உபகரணங்கள் வேண்டுமா? இங்க போங்க!'
நிறையபேர் கிராம வாழ்விலிருந்து நகர வாழ்வுக்கு மாறிவிட்டதால் தாவரங்களுடான பிணைப்பற்றுபோய் வாழ்ந்து வருகிறார்கள். அதற்கான தொடர்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகின்றன மாடித்தோட்டங்கள். நிறைய பேர் மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஆர்வம் இருந்தாலும், அதை எப்படிச் செயல்படுத்துவது, விதைகள் எங்கு கிடைக்கும், பைகள் கிடைக்குமிடங்கள், பயிற்சிகள் எங்காவது கிடைக்குமா என்று தேடி வருகிறார்கள்.
சென்னை, அண்ணா நகரில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலமாகப் பயிற்சி அளித்து வருகிறார்கள். ஆனால், கட்டணப் பயிற்சியாக வழங்கப்படுகிறது. சென்னைக்கு மிக அருகில் பொத்தேரி ரயில் நிலையம் அருகே உள்ள காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் (Krishi Vigyan Kendra- KVK) மாடித்தோட்டத்துக்கு இலவசமாகப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் பேராசிரியை நிஷா பேசியபோது, ``காய்கறிகள் நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு ஒரு நபர் 300 கிராம் காய்கறிகளையும் 85 கிராம் பழங்களையும் உண்ண வேண்டும் என்கிறது ஊட்டச்சத்து ஆய்வு. ஆனால், தற்போது ஒரு நாளைக்கு ஒரு நபர் 120 கிராம் காய்கறிகளையே உண்ண முடிகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
இருந்தாலும் மாடித்தோட்டம் மூலம் அதை நாம் ஓரளவுக்கு நிவர்த்தி செய்ய முடியும். நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே சிறந்த முறையில் சுலபமாகப் பயிர் செய்துகொள்ள மாடித் தோட்டம் ஒரு முக்கிய வடிகாலாக இருந்து வருகிறது. அதனால் அரசும் நகரப்பகுதிகளில் மாடித்தோட்டம் போடுவதை ஊக்கப்படுத்தி வருகிறது. மாடித்தோட்டம் அமைத்தால் வீட்டின் அழகு கூடும்.
Comments