உயிருடன் உள்ள ஒரு விலங்கை பயன்படுத்தி கொலை

 


*1000 பக்கம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகளை மட்டுமே கொண்டு, இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட அரிதிலும் அரிதான வழக்கு*




💥முதலில் சுரேசிடமிருந்து வாங்கிய அணலி பாம்பைவிட்டு மார்ச் 2-ம் தேதி கடிக்கச் செய்தேன். அப்போது உத்ரா சத்தம்போட்டு அலறியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் தப்பிவிட்டார். முதல் முறை பாம்பு கடித்த போது உத்ரா சத்தமிட்டால்.மருத்துவமனை கொண்டு சென்று காப்பற்றப்பட்டாள். எனவே, இரண்டாவது முறை சத்தம் போடாமல் இருக்க தூக்க மாத்திரை கொடுத்து மயங்க வைக்க முடிவு செய்தேன். எனவே உத்ராவிற்கு தூக்க மாத்திரை கலந்த பாயாசம், பழச்சாறு கொடுத்தேன். அதனால் தான் பாம்பு கடித்த போது உத்ரா கத்தவில்லை


💥மனைவி இயற்கையாக இறந்ததுபோல காட்டுவதற்காக கொலை ஆயுதமாக பாம்பை கையில் எடுத்துள்ளார் சூரஜ். மனைவியைக் கொன்றபிறகு நாக தோஷம் காரணமாக அவர் பாம்பு கடித்து இறந்துள்ளார் என்பதை காட்ட இவ்வாறு செய்துள்ளார். மனைவி இயற்கையாக இறந்தால் அவரது சொத்துகளும் கிடைக்கும், வேறு திருமணமும் செய்துகொள்ளலாம் எனத் இந்தக் கொலைபாதகத்தை செய்துள்ளார் சூரஜ்.


💥சூரஜ்ஜுக்கு பாம்பு கொடுத்த சுரேஷ் என்பவர் முதலில் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் கொலைக்கு எனத் தெரியாமல் பாம்பு கொடுத்ததால் பின்னர் இந்த வழக்கின் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டார்.


💥சூரஜ் பாம்பின் தலையைப் பிடித்து தன் மனைவி உத்ராவை கடிக்க வைத்துள்ளது தெளிவாகியுள்ளது. ஏனென்றால், சாதாரணமாக பாம்பு கடித்தால் அதன் பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி 1.7 செ.மீ இருக்கும், அதன் தலையைப் பிடித்து கடிக்க வைத்தால் பற்களுக்கு இடையேயான இடைவெளி 2.8 செ.மீ வரை இருக்கும் இருக்கும். அதற்க்கான மாதிரி சோதனைக்காக, உத்ராவின் எடை மற்றும் உயரத்துக்கு ஏற்ப ஒரு உருவம் செய்யப்பட்டு, அதில் கோழி இறைச்சி கட்டி வைத்து பாம்பைவிட்டு கடிக்க வைத்து டம்மி சோதனை நடத்தி அறிக்கை அளிக்கப்பட்டது

சூரஜ் வீட்டில் உத்ரா பாம்பினால் கடிப்படும்போது முதல்மாடியில் இருந்துள்ளார். வீரியன் வகை பாம்புகள் பொதுவாக தரைப்பகுதியில், விவசாய நிலங்களில் மட்டுமே காணப்படும். மரங்களில் கூட அவற்றை அரிதாகத்தான் பார்க்கமுடியும். தரையில் செல்லும்போதுதான் எதிராளிகளை வீரியன் பாம்புகள் சீண்டுகின்றன. அதனால் யாராவது பாம்பை கொண்டு சென்று முதல்மாடியில் வீட்டிருக்க வேண்டும் என சந்தேகித்தோம். சூரஜ் அம்மாவிடம் விசாரித்தோம். அவர் முதல்மாடியில் ஜன்னல் அருகே சாய்ந்திருந்த மரக்கிளையை கைக்காட்டினார். அந்த கிளை வழியாகத்தான் பாம்பு உள்ளே வந்திருக்கும் என்றார். ஆனால் அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது வேறுமாதிரி கூறினார்கள். அந்த மரக்கிளையை தற்போது தான் அவரது வீட்டின் மீது சாய்ந்துள்ளது. அதனை ஜன்னல் அருகே இழுத்து வைத்துள்ளனர் என்றனர். 


💥உத்ராவை கடித்த இரண்டாவது பாம்பு நாகப்பாம்பு. இது நடந்தது உத்ரா வீட்டில் அவரது அறைக்கு பாம்பு எப்படி வந்தது. அவரது அறையில் இரண்டு ஜன்னல்கள் இருந்தது. இரண்டும் 150 செண்டிமீட்டர் உயரத்தில் இருந்தது. ருத்ராவை கடித்ததாக கூறப்படும் நாகம் 150 செண்டிமீட்டர் நீளம் இருந்தது. பொதுவாக நாகப்பாம்புகள் தன்னுடைய நீளத்தில் மூன்றில் ஒருபங்கு அளவு உயரம் எழும் திறன் கொண்டது. அப்படியானால் ருத்ராவை கடித்த பாம்பினால் 50 செண்டிமீட்டர் உயரம் தான் எழ முடியும். பாம்புகளில் அடிப்படையின் படி  இயலாத காரியம். நாகங்கள் மாலை 6 மணி முதல் 8 மை வரை வேட்டையாடுகின்றன. அதன்பின்னர் நாகங்கள் நீண்ட ஓய்வு எடுத்துக்கொள்கின்றன. நாகங்களின் இயல்பின் படி அதனை ஆத்திரமூட்டாமல் அவை தாக்குவது கிடையாது. 


💥வீரியன் பாம்புகள் குறித்து கூகுளில் அதிகம் தேடி படித்திருந்தார். வீரியன் வகை பாம்பு ருத்ரவை கடித்த பின்னர் அதுகுறித்த தேடலை அவர் நிறுத்திவிட்டார். அதன்பின்னர் நாகப்பாம்புகள் குறித்து தேடிப்படித்துள்ளார். அதன்பின்னர் நாகம் உத்ராவை சீண்டியுள்ளது. இந்த இரண்டு பாம்புகள் குறித்து மட்டும் இணையத்தில் தேடிதேடிப்படித்துள்ளார்

இறந்துபோன பாம்பினை உடற்கூராய்வு செய்ததில் பாம்பின் வயிறு காலியாக இருந்தது தெரியவந்தது. அப்படியென்றால் யாரோ பாம்பினை பிடித்து பாட்டிலில் அடைத்து வைத்திருக்க வேண்டும். 7 நாட்கள் பாம்பு பட்டினி போடப்பட்டிருந்தது.


💥டிஎன் ஏ-க்களை கொண்டு சுரேஷ் கொடுத்த பாம்பை வைத்துதான் சூரஜ் உத்ராவை கொன்றார் என உறுதிசெய்தோம். பாம்பை அடைத்துவைக்க சூரஜ் பயன்படுத்திய டப்பாவை கைப்பற்றினோம். அதில் இருந்த டிஎன்ஏ போஸ்ட்மார்டம் செய்யப்பட்ட பாம்பின் டிஎன்ஏ ஒத்துப்போனது. அவர் கொண்டுவந்த பாம்பு தீண்டித்தான் இறந்தார் என்பதனை நிரூபிக்க அந்த பாட்டிலில் உள்ள பாம்பின் டீஎன்ஏ சோதனை.


💥முதலில் 10 ஆண்டு, தொடர்ந்து ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவித்த பின்னர், இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்லம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மனோஜ் உத்தரவிட்டார்.


💥உயிருடன் உள்ள ஒரு விலங்கை பயன்படுத்தி கொலை செய்தது கேரளாவில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,